• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-01-17 17:57:13    
பப்பாளியும் பாலும் மிக்க ஐஸ்கிரீம்

cri
கலை........வணக்கம் நேயர்களே. கோடை காலத்தில் வீட்டுக்கு வந்தவுடன் ஒரு கோப்பை ஐஸ்கிரீம் தின்றால் வெப்பம் உடனே குறையும் அல்லவா?

ராஜா.......வெப்பத்தைக் குறைப்பதற்கு பலவகை ஐஸ்கிரீம்கள் உள்ளன. இன்று எந்த வகை ஐஸ்கிரீம் நமது நண்பர்களுக்கு சொல்லப் போகிறீர்கள்?

கலை...........இன்றைக்கு பப்பாளியும் பாலும் கலந்து செய்யப்படும் ஐஸ்கிரீண் தயாரிப்பு முறை சொல்ல்லலாம்?

ராஜா....... சொல்லுங்கள்.

கலை.......இந்த ஐஸ்கிரீம் தயார்பதற்கு 150 கிராம் பப்பாளி, 200 மில்லி பால். அதாவது சுமார் ஒரு கோப்பை பால் போதும். ஒரு சிறிய பெட்டி ஐஸ், ஒரு தம்பளர் சர்க்கரை.

ராஜா.......பப்பாளி, பால், ஐஸ், சர்க்கரை ஆகிய பொருட்கள் தேவை. சிரி? சிலருக்கு சர்க்கரை ஒத்துக் கொள்ளாது. சர்க்கரை போடாமல் இந்த ஐஸ்கிரீம் செய்ய முடியாதா?

கலை......அது உங்கள் விருப்பம். சர்க்கரை போட நினைத்தால் போடலாம். போடமாமலும் இருக்கலாம்.

ராஜா........சரி எப்படி தயாரிப்பது. விபரமாக சொல்லுங்கள்.

கலை......சொல்கின்றேன். முதலில் பப்பாளியின் தோலை உரிக்கணும். பிறகு சிறுசிறு துண்டுகளாக நறுக்க வேண்டும். அதன் பிறகு பழச் சாறு அரைக்கும் கருவியில் 200 சிசி பால், சர்க்கரை, ஐஸ் கட்டிகள் ஆகியவற்றை போட்டு நடு வேகத்தில் இவற்றை கலாக்க வேண்டும். அருமையான பப்பாளி நிறைந்த பால் தயார்.

1  2  3