
மியோங் இன ஆடைகள் பல வண்ணங்களில், பல வகைகளில் காணப்படுவதினால் புகழ் பெற்றுள்ளன. மியோங் இனத்தின் ஒவ்வொரு விழாகளும், மங்கையர்கள் தத்தம் கைவினைக் கலை நுட்பத்தையும் ஆடைகளையும் காண்பிக்கும் நேரமாகும். மியோங் இன ஆடை ஆய்வில் ஈடுபட்டுள்ள மியோங் இன மங்கையர் Wei Yan Yan கூறியதாவது:
"மியோங் இன ஆடைகள், உடலில் அணியப்பட்ட ஒரு வரலாற்று நூலாகக் கூறப்படலாம். ஏனெனில், மியோங் இனம், குடியேற்ற இனமாகும். தெற்கை நோக்கி குடியேறிய போது, மகளிர், ஊசி மற்றும் நூல் கொண்டு, சொந்த வரலாற்றை, தமது ஆடைகளில் சித்திரத் தையல் வேலை செய்தனர். தொலைத்தூரத்திற்கு இதை கொண்டு போனோம்." என்றார், அவர்.
1 2 3
|