• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-01-17 21:30:21    
மியோங் இன ஆடைகள்

cri

இயற்கைக்கு மதிப்பு அளிக்கும் மியோங் இனத்தவர்கள், பறவை, வண்ணத்துப்பூச்சி, மாடு, யாழி, மரம் முதலியவற்றின் படங்களைச் சித்திரத் தையல் வேலை செய்வர். இது, மங்களம் அழகு ஆகியவற்றின் அடையாளம் என அவர்கள் கருதுகின்றனர். பொதுவாக ஊதா நிறம், மியோங் இன ஆடைகளில் காணப்படுகின்றது. தேசிய இனத் தனித்தன்மையை இது எடுத்துக் காட்டுவது, மியோங் இனத்தின் பாவாடையாகும். சிவப்பு, நிலம், ஊதா நிறம் ஆகியவற்றைக் கொண்ட வண்ண துணி நாடாவைக் கொண்டு பாவாடையின் விளிம்பு தைக்கப்படும். பாவாடையின் விளிம்பில், வெள்ளை நிற கம்பளி குஞ்சலங்கள் கட்டப்படுகின்றன. மங்கையர்களின் தலையில் அணியும் அலங்காரங்கள் தனித்தனிமை வாய்ந்தவை. எனவே, பார்ப்பதற்கு, மியோங் இன மங்கையர்கள் அழகாகக் காட்சி அளிக்கின்றனர்.

மியோங் இனத்துக்கு ஒரு ஆண்டில் ஏராளமான விழாக்கள் உள்ளன என்று சிலர் கூறியிருப்பது, மிகை. ஆனால், மியோங் கிராமத்தில் விருந்தினராக இருக்கும் போது, காதுக்கு இனிமையான Lu Sheng இசையைக் கேட்கலாம். வண்ண வண்ணமான நிறத்தில் அழகான ஆடைகளையும் வெள்ளி அலங்காரப் பொருட்களையும் காணலாம். விழா மகிழ்வினை இது போதிய அளவில் தரும். குவாங் சி மியோங் இன தன்னாட்சி மாவட்டத்தின் தலைவர் Wei Ming Shan கூறியதாவது:

"எங்கள் Rong Shui இடத்திலுள்ள மியோங் இன மாவட்டம் "நூறு விழாக்கள் உள்ள கிராமம்" என கூறப்பட்டு வருகின்றது. ஆண்டின் நான்கு காலாண்டுகளிலும் விழா அதிகமாக இருக்கின்றன. தனித்தன்மை வாய்ந்த தேசிய இன நடையுடை பாவனை, குதிரையோடு விளையாடுவது, Lu Sheng இசைக் கருவியை ஊதுவது உட்பட, வேவ்வேறான தேசிய இனங்கள் விழா கொண்டாட்டகளை பிரதிபலிக்கின்றன" என்றார், அவர்.

1  2  3