
வட மேற்கு குவாங் சி சுவாங் இன தன்னாட்சிப் பிரதேசத்தின் பெரிய மலைகளில் அமைந்துள்ள Rong Shui மாவட்டம், மியோங் இனத்தன்னாட்சி மாவட்டமாகும். பண்டைய எளிதான மியோங் இன நடையுடை பாவனை அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
பல்வகைகளிலான தேசிய இன நடையுடை பாவனை, உள்ளூர் எழிலான இயற்கை காட்சி ஆகியவை, பெரும் எண்ணிக்கையிலான பயணிகளை ஈர்த்துள்ளன. சுற்றுலா வளர்ச்சியினால், யியோங் இனத்தவரின் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, முன்பு, சொத்தின் அடையாளமாகத் திகழும் வெள்ளி அலங்காரப் பொருள், இப்போது, மங்கையர்கள் அடிக்கடி பயன்படுத்தும் வழக்கமான அலங்காரப் பொருளாக மாறியுள்ளது. முன்பு, முக்கிய விழா நாட்களில் காணப்படக்கூடிய Lu Sheng ஆடல்பாடல் அரங்கேற்றம், மியோங் இனத்தவர், பயணிகளை வரவேற்கவும், மியோங் இனத்தவரின் உளமார்ந்த உணர்வைக் காட்டவுமான வடிவமாக்கப்பட்டது. மியோங் இன மகளிர் ஓய்வு நேரத்தில் தயாரித்த எழிலான சித்திரத் தையல் வேலைப்பாடுடைய பொருள்களும், மியோங் இன கிராமத்தில் வெள்ளிப்பொருள் தயாரிப்பவர் உருவாக்கிய செம்மையான வெள்ளி அலங்கார பொருளும் பயணிகளை பெரிதும் ஈர்த்துள்ளன. 1 2 3
|