• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-01-18 22:15:27    
சீனாவில் நாகரிகமான செயல்கள்

cri

சீனர்களின் வாழ்க்கையில் பல வழக்கங்கள் நாகரிகமற்ற செயல்களாக கருதப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, பொது இடங்களில் உரத்த குரலில் சத்தமாகப் பேசுவது, பேருந்துக்கு காத்திருக்கும் போது வரிசையில் நிற்காமல் இருப்பது. ஆனால், இது போன்ற செயல்கள் படிப்படியாக குறைந்து வருகின்றன. தற்போது, சீனாவில் நாகரிகமாக நடந்து கொள்வது பற்றி பிரச்சாரம் செய்யப்படுவதால், மக்களின் நாகரிகப் பண்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

காலையில் சுறுசுறுப்பான நேரத்தில், பெய்ஜிங் மேற்கு சாங் ஆன் வீதியில் ஒரு பேருந்து நிலையத்தில், பயணிகள் வரிசைகளில் காத்திருக்கின்றனர். ஓராண்டுக்கு முன் இப்படி இல்லை என்று ஓர் அம்மையார் எமது செய்தியாளரிடம் கூறினார்.

"முன்பு பேருந்துக்காக காத்திருந்த போது, அனைவரும் கும்பலாக நின்றனர். பேருந்து வந்ததும், இளைஞர்கள் முந்திக் கொண்டு பேருந்தில் ஏறினார்கள். முதியோர்களும் சிறுவர்களும் ஏற முடியவில்லை. தற்போது நிலைமை சீராக உள்ளது. வரிசையாக நின்று காத்திருக்கும் வழக்கம் வந்து விட்டது. மக்களின் பண்பு உயர்ந்து வருகின்றது என்பதை நான் உணர்கின்றேன்" என்றார் அவர்.

கடந்த சில ஆண்டுகளில் பெய்ஜிங்கில் பயணிகள் போக்குவரத்து விரைவான வளர்ச்சி கண்டுள்ளது. ஆனால், ஒரு கோடிக்கு மேற்பட்ட மக்கள் தொகையுள்ள மாநகருக்கு, பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் இன்னும் பற்றாக்குறையாகவே உள்ளது. கடந்த இரு ஆண்டுகளில் பேருந்தில் ஏற வரிசையில் காத்திருக்கும் நிலைமை பரவலாகியுள்ளது. அதிலும், பேருந்தில் ஏறுவதற்கு மேலும் அதிகமான நேரம் காத்திருக்கத் தேவையில்லை.

பெய்ஜிங்கில் உள்ள வீதிகளிலும் தெருகளிலும் நடக்கும் போது, கண்ட இடங்களிலும் குப்பை கூளங்கள் எறிவது, எச்சில் துப்புவது போன்ற முந்தைய நிலைமை, இப்போது மிகக் குறைவாக காணப்படுகிறது. பொது இடங்களில் நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதில் மக்கள் மேன்மேலும் கவனம் செலுத்துகின்றனர். இசை நிகழ்ச்சியை கேட்டு ரசிக்கும் போது, விளையாட்டு போட்டியைக் கண்டு ரசிக்கும் போது, மக்கள் செல்லிடபேசியை அணைத்து விட்டு, உரிய நேரத்தில் கை தட்டி, பாராட்டுகின்றனர்.

இத்தகைய மாற்றத்தை சீனாவின் இதர நகரங்களிலும் காணலாம். அண்மையில், சே ஜியாங் மாநிலத்தின் ஹாங்சோ நகரில் வாடகை கார் ஓட்டுநரின் உற்சாகத்தை எமது செய்தியாளர் நேரில் கண்டார்.

1  2  3