
40 வயதான ஜின் யொங் சின், 20 ஆண்டுகளாக வாடகை கார் ஓட்டி வருகிறார். பயணிகளுக்கு வசதி வழங்கும் பொருட்டு, தமது காரில், ஹாங்சோ நகரின் வரைபடம், செய்தியேடு, கைதுடைக்கும் காகிதம், ஊசி, நூல் ஆகியவற்றை அவர் வைத்துள்ளார். ஓட்டுநராக மட்டுமல்ல, நகரம் பற்றி பிரச்சாரம் செய்பவராகவும் அவர் திகழ்கிறார். தமது செயல் ஹாங்சோ நகரின் தோற்றத்தை பிரதிபலிக்கிறது என்று அவர் கருதுகிறார். அவர் கூறியதாவது—
"பயணிகள் ஹாங்கோ வந்து, விமானத்திலிருந்து அல்லது ரயிலிலிருந்து இறங்கியதும், முதலில் வாடகை கார் ஓட்டுநர்களைத் தான் சந்திக்கின்றனர். உங்கள் சேவை ஒழுங்கானதா இல்லையா என்பது, ஒரு நகரின் நாகரிக அளவை பிரதிபலிக்கிறது" என்றார் அவர்.
சீனாவின் நகரங்களில் மட்டுமல்ல, கிராமப்புறங்களிலும், மேலும் நாகரிக வாழ்க்கையை மக்கள் நாடி, சுகாதாரமற்ற மற்றும் நாகரிகமற்ற வழக்கங்களை நீக்குகின்றனர். சா கேங் கிராமம், குவாங் சோ நகரின் பான் யு பகுதியின் சாவன் பட்டினத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம். அங்குள்ள மக்கள் தங்களது வீடுகளுக்கு முன்னும் பின்னும் மலர்களையும், பாதையின் இரு பக்கங்களிலும் ஊரிலுள்ள சிறு பூங்காவிலும் பல்வகை மரங்களையும் நடுகின்றனர். மர நிழலில் முதியோர்கள் ஓய்வு எடுக்கின்றனர். குழந்தைகள் மகிழ்ச்சியுடன் ஓடியாடி விளையாடுகின்றனர். முன்பு கிராமவாசிகள் சுற்றுப்புற சுகாதாரத்தில் கவனம் செலுத்தவில்லை. கண்ட இடங்களிலும், பன்றிகள், கோழிகள் மற்றும் வாத்துகளை நடமாட விட்டு, குப்பைக் கூளங்களை எறிந்தனர். தற்போது, கால்நடைகள் பட்டியில் அடைத்து வளர்க்கப்படுகின்றன. ஒவ்வொரு வீட்டிலும் குப்பை தொட்டி இருக்கிறது. ஒவ்வொரு நாளும் சிறப்பு பணியாளர் வீடுவீடாக சென்று குப்பைக் கூளங்களைச் சேகரிக்கின்றார் என்று கிராமவாசி சோ ரி சிங் செய்தியாளரிடம் கூறினார்.
"தற்போதைய வாழ்க்கை சீராக உள்ளது. மேலும் வசதியான வாழ்க்கையை மக்கள் நாடுகின்றனர். நல்ல சூழ்நிலை உருவாகியதால், நல்ல வாழ்க்கை வழக்கத்தை உருவாக்குவதற்கு அனைவரும் முக்கியத்துவம் தருகின்றனர். பரிசோதனை செய்யப்பட்டாலும் சரி, செய்யப்படா விட்டாலும் சரி, நாங்கள் சுற்றுச்சூழலை செவ்வனே பாதுகாப்போம்" என்றார் அவர்.
1 2 3
|