
சீரான சூழலையும் ஒருங்கையும் மக்கள் தங்களாகவே முன் வந்து உருவாக்கும் போது, மக்களின் நாகரிக அளவை உயர்த்துவதற்காக, சீன அரசு சட்டவிதிகளையும் வகுத்துள்ளது. பல்வேறு நிலை அரசாங்கங்கள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. பொதுக் கழிப்பறைகள் மற்றும் குப்பைத் தொட்டிகளை அதிகரிப்பது, குடிமக்களின் நாகரிகப் பண்புகள் பற்றிய கையேட்டை வெளியிட்டு, நகரவாகிகளுக்கும் கிராமவாசிகளுக்கும் இலவசமாக வழங்குவது ஆகியவை இந்த நடவடிக்கைகளில் அடங்கும்.
கெட்ட வழக்கங்கள் ஏற்படுவதற்கான காரணம் பற்றி சீன மக்கள் பல்கலைக்கழகத்தின் தத்துவத் துறை பேராசிரியர் கே சேன் ஹுங் அம்மையார் விளக்கம் கூறினார். தனது தேவைக்காக மற்றவரின் உணர்வைப் பொருட்படுத்தாமல் செயல்படுவதுடன் இது தொடர்புடையது. தனது காரியத்தில் மட்டுமே கவனமாக இருப்பதுடன் தொடர்புடையது. ஆனால் மக்களின் வாழ்க்கை வழக்கங்கள் நீண்டகாலமாக படிப்படியாக உருவாகின்றன. பின்தங்கிய உற்பத்தி ஆற்றலையும் வாழ்க்கை முறையையும் கெட்ட வழக்கங்கள் ஓரளவில் பிரதிபலிக்கின்றன என்று அவர் கூறினார்.
"பொருள் நாகரிகம் மற்றும் ஆத்மீக நாகரிகம் உயர்வதால், மக்களின் வாழ்க்கை முறைக்கு நேரடியாக தாக்கம் ஏற்படும். மக்களின் கருத்து மாற்றம், அவர்கள் நாகரிக வாழ்க்கை முறையிலும் செயல் வழக்கத்திலும் படிப்படியாக நுழைவற்கு வழிகோலும். நவீன நாகரிக வாழ்க்கைக்குப் பொருத்தமற்ற பகுதிகளை அவர்கள் படிப்படியாக மாற்றுவார்கள்" என்றார் அவர்.
ஒவ்வொரு நாட்டிலும் நாகரிகம் குறைவான செயல்கள் வேறுபட்ட அளவில் நிலவுகின்றன. பல்வேறு நாடுகளுக்கிடையிலான பண்பாட்டு வித்தியாசத்துடனும் வட்டார வித்தியாசத்துடனும் இவை தொடர்புடையவை. சீனப் பொருளாதார வளர்ச்சியுடனும், சமூகத்தின் நவீன மயமாக்கத்துடனும், சீனர்களின் செயல் முறையும் வளர்ந்து வருகிறது. மேலும் உயர்வான வாழ்க்கை தரத்தை மக்கள் தேடுவது உறுதி. 1 2 3
|