• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-01-25 20:27:36    
குடியிருப்பு பகுதியின் பண்பாட்டு வாழ்க்கை

cri

சீனாவில் வெளிநாட்டுத் திறப்பு பணி நடைமுறைக்கு வந்தது முதல் மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து வருவதோடு, பண்பாட்டு நிகழ்ச்சிகளும் ஆன்மீக வாழ்க்கைக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. மக்களுக்காக பண்பாட்டு வாழ்க்கையை வளப்படுத்தும் வகையில், தற்போது பெய்ஜிங்கிலுள்ள பல குடியிருப்பு பிரதேசங்களில் விதம் விதமான பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

ஒவ்வொரு நாள் அதிகாலையிலும், பெய்ஜிங் மாநகரின் மேற்கு பகுதியிலுள்ள ஹாய்தே பூங்கா குடியிருப்பு பகுதியின் சதுக்கத்தில் சுமார் 100 முதியவர்கள் ஒன்று கூடி, அருமையான இசையுடன் ஆடுகின்றனர். இந்த முதியவர்களின் தலைமுடி நரைத்து விட்ட போதிலும், ஆரோக்கியமாக இருக்கிறார்கள். அவர்களின் நடனத்தில் அழகும் நளினமும் தெரிகிறது. ஆடலின் மூலம் தனக்கு தானே மகிழ்வித்து, அருமையான நேரத்தை அனுபவிக்கின்றனர். ஹாய்தே பூங்கா குடியிருப்பு பகுதியின் உடல் பயிற்சி ஆடல் குழுவைச் சேர்ந்த முதியோர்கள் அங்குள்ள அழகான காட்சியாக மாறியுள்ளனர்.

யே தொ சியா அம்மையார் இந்த ஆடல் குழுவை உருவாக்கினார். வேலையிலிருந்து ஓய்வு எடுக்கும் முன், அவர் ஆடலை விரும்பினார். 2000ஆம் ஆண்டில் குடியிருப்பு பிரதேசத்தில் வசிக்கும் முதியோர்களை அவர் ஒன்று சேர்த்து இந்த உடல் பயிற்சி ஆடல் குழுவை உருவாக்கி, இலவசமாக பயிற்சி அளித்தார். முதியோர்களின் தனிச்சிறப்புக்கு இணங்க, உடலின் இயக்கங்களை இணைத்து, எளிய ஆடல் இயக்கங்களை அமைத்தார். ஒவ்வொரு நாள் அதிகாலையிலும் முதியோர்கள் பலர் அவருடன் சேர்ந்து ஆடுகின்றனர். முன்பு 10க்கு மேற்பட்டவர் அடங்கிய இந்த ஆடல் குழுவில் தற்போது சுமார் 100 பேர் உள்ளனர். குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள முதியோர்கள் ஆடலை வரவேற்கின்றனர் என்று யே தௌ சியா அம்மையார் கூறினார்.

1  2  3