50 வயதான மக்கள் உடல் பயிற்சி செய்யாவிட்டால் நோய்வாய்படுவது எளிது. வயதான மக்களுக்கு, முதலில் கால் உறுதி இழந்து விடும். உடல் பயிற்சி செய்தால், உடல் மற்றும் மனம் ஆரோக்கியமாக இருக்கும் என்றார் அவர்.
ஆடல் குழுவைத் தவிர, பீகிங் இசை நாடகக் குழுவும் ஹாய்தே குடியிருப்பு பகுதியில் உண்டு. 62 வயதான வாங் லியான் பென் அம்மையார் இந்த குழுவைச் சேர்ந்தவர். 20க்கு அதிகமான முதியோர்கள் தாங்களாகவே ஹாய்தே பீகிங் இசை நாடகக் குழுவை உருவாக்கினார்கள். ஒவ்வொரு சனிக்கிழமையிலும் 2, 3 மணி நேரம் அவர்கள் பாடுகின்றனர். சில சமயம், ஆலோசனை பெறும் பொருட்டு, பீகிங் இசை நாடக கலைஞர்களை அவர்கள் அழைக்கின்றனர்.

பெய்ஜிங் மாநகரின் தெற்கில் உள்ள "Xi Luo Yuan" என்னும் குடியிருப்பு பகுதியில் rock and roll இசைக்குழு இருக்கின்றது. "Jidudianzu" என்னும் இந்த இசைக்குழுவில், நான்கு இளைஞர்கள் உள்ளனர். அவர்களுக்கு சொந்த வேலை இருந்த போதிலும், rock and roll இசையை விரும்பியதால், ஒன்று சேர்ந்து குழு அமைத்துள்ளனர். இக்குடியிருப்பு பகுதியில் நடைபெறும் நடவடிக்கைகளில் இந்த நான்கு இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கெடுக்கின்றனர். எடுத்துக்காட்டாக, இளைஞர் விழாவிலும், கோடைகால இரவு நிகழ்ச்சிகளிலும், குடியிருப்புப் பகுதியில் உள்ள மக்களுக்கு சிறந்த இசை நிகழ்ச்சிகளை அவர்கள் அரங்கேற்றுகின்றனர். இக்குழுவில் மேளம் வாசிப்பவர் Jia Wei செய்தியாளரிடம் பேசுகையில், துவக்கத்தில், இசை குழுவின் நிகழ்ச்சிகளை இளைஞர்கள் தான் மிகவும் விரும்பினர். தற்போது, முதியவர்கள் பலரும் rock and roll இசையை விரும்புகின்றனர். முதியவர்கள், இளைஞர்களுடன் சேர்ந்து கைதட்டி rock and roll இசை தரும் மகிழ்ச்சியை அனுபவிக்கின்றனர்.
1 2 3
|