
இக்குடியிருப்புப்பகுதியில் வாழும் முதியவர்களுக்கு ஆங்கில மொழி பாட வகுப்பை குடியிருப்பு பகுதி கமிட்டி நடத்துகிறது. அருகில் உள்ள பள்ளிகளின் ஆசிரியர்கள், இலவசமாகப் பாடம் சொல்லிக்கொடுக்கின்றனர். இது, குடிமக்களின் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது, 600க்கு அதிகமானோர் இவ்வகுப்பில் கலந்து கொள்கின்றனர். 2002ஆம் ஆண்டு ஆங்கில மொழி வகுப்பு துவங்கியதும், இக்குடியிருப்பு பகுதியில் வாழும் 51 வயதான Xie Shu Yan அம்மையார், வகுப்புக்கு தவறாமல் வந்தார். தற்போது, அவரால் அன்னியர்களுடன் எளிதில் பேசி கருத்து பரிமாறிக்கொள்ள முடிகிறது. ஆங்கில மொழியை கற்றுக்கொள்வது பற்றி பேசிய அவர், 2008ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் போது, சமூகத்துக்கு சேவை புரிவது தான், இவ்வகுப்பில் நான் சேர்ந்ததன் நோக்கம். வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள் செளகரியமாக இருக்கச்செய்வது எனது விருப்பம் என்று அவர் கூறினார்.
பெய்ஜிங் மாநகரின் கிழக்கில் உள்ள "Qing Qing Jia Yuan" என்னும் குடியிருப்பு பகுதியில் சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் இருக்கின்றன. அங்கு நடவடிக்கை மையம் மற்றும் நூலகம் நிறுவப்பட்டுள்ளன. தவிர, 20 ஆயிரம் சதுர மீட்டர் நிலப்பரப்புடைய பண்பாட்டு சதுக்கம் உள்ளது. இவையனைத்தும், பண்பாட்டு நடவடிக்கை மேடையை மக்களுக்கு வழங்கியுள்ளன. இக்குடியிருப்பு பகுதியில் உள்ள நடவடிக்கை மையத்தில், தொழில் முறை அல்லாத கையெழுத்துக் கலைப் பிரிவை குடியிருப்பு பகுதிக் கமிட்டி நடத்தியுள்ளது. சாதாரண நாட்களில், இங்கு முதியவர்கள் அதிகம் வருகின்றனர். வாரத்தின் இறுதியில் பல இளைஞர்களும் குழந்தைகளும் இங்கு வருகின்றனர்.

பெய்ஜிங்கில் இது போன்ற குடியிருப்பு பகுதிகள் அதிகம். குடியிருப்பு பகுதிகளில் உள்ள மக்களின் பண்பாட்டு வாழ்க்கையை செழிப்பாக்கும் பொருட்டு, பலதரப்பட்ட பண்பாட்டு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. 1 2 3
|