
உலகின் உச்சியிலுள்ள திபெத் தன்னாட்சிப் பிரதேசம், தென் மேற்கு சீனாவில் அமைந்துள்ளது. தனித்தன்மை வாய்ந்த தோற்றமும், ஒளிவீசும் பண்பாடும் மிக்க இந்த மர்மபூமி, உலகின் பல்வேறு இடங்களிலிருந்தும் வந்துள்ள பயணிகளின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்துள்ளது. திபெத்துக்கு வந்த பலரை ஒரு திபெத் வழி புத்தமத கலைப்பொருளான தாங் கர் ஓவியம் ஈர்த்துள்ளது. பிரபல தாங் கர் ஓவியர் ச்டன்லோஜினை அறிந்து கொள்வோம்.
தாங் கர் என்பது, துணி, பட்டுத்துணி அல்லது தாளில் வரையப்பட்ட, அல்லது தைக்கப்பட்ட ஓவியமாகும். இது, திபெத் இனப் பண்பாட்டின் தனித்தன்மை உடையது. அதன் வடிவம், பலதரப்பட்டது. தாங் கர் ஓவியத்தில் வெவ்வெறு வடிவங்களில் புத்தரின் உருவங்கள் தீட்டப்படுகின்றன. அல்லது, திபெத் இன வரலாறு, தேசிய இன நடை யுடை பாவனை ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் ஓவியங்கள் வரையப்படுகின்றன. வழக்கமாக, கோயில்கள், வழிபாட்டிடம் மதகுருமார்களின் இல்லங்கள், திபெத் வழி புத்த மத நம்பிக்கையுடையோரின் வீடுகள் ஆகியவற்றில் தாங் கர் ஓவியங்கள் வைக்கப்படுகின்றன. திபெத்தில், இத்தகைய திபெத் வழி புத்தமத கலைப்பொருட்களை எங்கெங்கும் காணலாம். பயணிகளின் கருத்தில், தாங் கர், தலைசிறந்த கலைப்பொருள் ஆகும். எனவே, நினைவுக்காக அனைவரும் தாங் கர் ஓவியம் வாங்கிக்கொள்கின்றனர். லாசாவில் சுற்றுலா வணிகப் பொருட்களை விற்கும் கடைகள் நிறைந்துள்ள Bajiaojie என்னும் சாலையில் தாங் கரை மட்டுமே விற்கும் Bakuo தாங் கர் சிறப்பு ஓவிய கடை ஒன்று உள்ளது. கடையின் உரிமையாளர், ச்டன்லொஜின் பற்றி இன்று அனைவரும் அறிந்து கொள்வோம்.
1 2 3
|