• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-01-27 06:54:46    
திபெத்திய தாங் கர் ஓவியர் ச்டன்லோஜின்

cri

வயது, குடியுரிமை, தேசிய இனம், பால் ஆகிய வேறுபாடு பார்க்காமல், சீடர்களைச் சேர்த்துக்கொள்வதாக ச்டன்லொஜின் கூறினார். அங்கு ஓவியம் கற்றுக்கொள்வோர் அனைவருக்கும் கட்டணம் இல்லை. அன்றி, ச்டன்லொஜின் அவர்களுக்கு ஓவியத் துணியையும் வண்ணப் பொருட்களையும் இலவசமாக வழங்குகின்றார். இது பற்றி ச்டன்லோஜின் கூறியதாவது:

"நான் படிக்கும் போது, படிப்புக்கான கட்டணம் செலுத்தவில்லை. எனது ஆசிரியரைப் போலவே, நானும் கட்டணம் பெற விரும்பவில்லை." என்றார்.

தாங் கர் ஓவியம் தீட்டுவது மிகவும் கடினம். ஒரு தாங் கர் ஓவியத்தை ஏறக்குறைய 9 ஒழுங்குமுறைகள் மூலம் உருவாக்கலாம். சில வேளையில், தாங் கரிலுள்ள ஒரு சிறிய பூ வரைய மூன்று மணிநேரம் ஆகும். ச்டன்லொஜின் விற்கும் தாங் கரின் விலை, இதர ஓவியக் கடைகளில் விற்கப்படும் தாங் கர்களை விட அதிகம். இருப்பினும், வியாபாரம் நன்றாக நடக்கிறது. சிறிய இடத்தில் உள்ள இச்சிறிய கடை மூலம் ஆண்டுக்கு 3 லட்சம் யுவான் கிடைக்கின்றது. தமது வியாபாரம் பற்றி குறிப்பிடுகையில் அவர் கூறியதாவது:

"எங்கள் ஓவியங்கள் கவனமாக வரையப்பட்டவையாகும். துவக்கம் முதல் முடிவு வரை அவசரப்படாதே. மெதுவாக ஓவியம் செய்யுங்கள். இப்படி செய்தால், ஓவியங்கள் மென்மேலும் சீராகி விடும்" என்று சீடர்களிடம் கூறியதாக தெரிவித்தன.

பணக்காரரான ச்டன்லொஜின், தனக்குத் தேவையான செலவும் குடும்ப செலவும் தவிர, தனது வருமானத்திலிருந்து ஒரு பகுதியை ஒதுக்கி வைத்து நல்ல காரியங்களும் செலவிடுகிறார். ஊரில் போக்குவரத்து இன்னலைத் தீர்க்க, அவரின் நன்கொடையுடன் பாலம் கட்டப்பட்டது. பல்கலைக்கழக தேர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பெண் குழந்தை, வறுமை காரணமாக படிக்க முடியாத நிலையில் இருந்தார். ச்டன்லொஜின் அவருக்கு ஆதரவாக, மூன்று ஆண்டுகால கல்வி கட்டணத்தை வழங்கினார்.

30 வயதான ருபுஸிலேங் 1996ம் ஆண்டு முதல் ச்டன்லொஜினிடமிருந்து ஓவியம் கற்கத் துவங்கினார். தனது ஆசிரியர் ச்டன்லொஜின் பற்றிக் குறிப்பிட்ட போது, அவர் வியந்து பாராட்டிதாவது

"ஆசிரியர் ச்டன்லொஜின், எங்கள் ஒவ்வொருவரையும் நன்கு நடத்துகின்றார். குடியுரிமை, தேசிய இனம் எல்லாவற்றையும் அவர் பொருட்படுத்தவில்லை. அவர் நல்லெண்ணமுடையவர் என நான் உணர்ந்துள்ளேன்" என்றார்.


1  2  3