• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-01-27 06:54:46    
திபெத்திய தாங் கர் ஓவியர் ச்டன்லோஜின்

cri

40 வயதுக்கு மேலான ச்டன்லோஜின், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகரான லாசாவுக்கு அருகில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். குழந்தை பருவத்தில் ஓவியத்தில் இவருக்கு நாட்டம் அதிகம். அவர் நாள்முழுதும், சுற்றுப்புறங்களில் உள்ள கால்நடைகளை உற்று நோக்கி, அதிகப்படியான மாடுகளையும் ஆடுகளையும் வரைந்தார். 19 வயதான போது உள்ளூரிலுள்ள ஒரு பிரபலமான தாங் கர் ஓவியரின் மாணவரானார். ஆசிரியரின் கவனமான வழிகாட்டலில், ச்டன்லொஜின் ஓவிய நுட்பத்தில் பெரும் முன்னேற்றம் கண்டார். 1992 மற்றும் 1994 ஆண்டுகளில், ச்டன்லொஜின், அழைப்பின் பேரில், நேபாளத்தின் கோயில்களில் ஓவியம் செய்யப் போனார். ஓய்வுநேரத்தில், அப்போதைய நேபாளத்தில் பல சுற்றுலா இடங்களில் தாங் கர் விற்பனை கடைகள் விறுவிறுப்பாக இயங்குகின்ற நிலையில், அவரும் 1996ம் ஆண்டில் லாசாவில், தாங் கர் விற்பனை கடையை திறந்தார். அவர் கூறியதாவது:

அப்போது, லாசாவில் தாங் கர் ஓவிய கடை இல்லை. Bajiaojie என்னும் சாலையில் கடை ஒன்றை திறந்தால், விருந்தினர்கள், திபெத்தின் தாங் கர்களை அறிய விரும்புவார்கள் என நான் நினைத்தேன். கடையைத் திறந்த பின், பல விருந்தினர்கள் பேசுகையில், திபெத் தாங் கர் பற்றி கேள்விப்பட்டோம். ஆனால், எப்படி ஓவியம் தீட்டுவது எனத் தெரியவில்லை. இன்று முதன்முறையாக நேரில் பார்த்தோம் என்றார்கள். அவர்கள் மிகவும் விரும்புகின்றனர் என்று ச்டன்லொஜின் தெரிவித்தார்.

9 ஆண்டுகள் உருண்டோடின. லாசாவின் Bajiaojie சாலையில் சுமார் 30 தாங் கர் ஓவியக் கடைகள் உள்ளன. ச்டன்லொஜினின் ஓவியக் கடை விறுவிறுப்பாக இயங்குகின்றது. அதன் புகழும் மென்மேலும் பரவியுள்ளது. பல பயணிகள் இங்கு வந்து ஆடர் செய்கின்றனர். பலர் அவருடைய தாங் கர் ஓவியங்களை போற்றினர்.

Bajiaojie சாலையில் உள்ள இதர தாங் கர் ஓவியக் கடைகளில் இருந்து ச்டன்லொஜினின் ஓவியக் கடை வித்தியாசமானது. இங்கு தாங் கர் விற்கப்படுவதோடு, சீடர்களையும் அவர் ஏற்றுக்கொள்கின்றார். அவர்களுக்கு தாங் கர் ஓவியத்தைக் கற்பிக்கின்றார். 6 அமெரிக்கர்களும் ஜப்பானியரும் அவரிடம் சீடர்களாக பயின்றனர். சீனாவின் பல்வேறு இடங்களிலிருந்து வந்த சீடர்களின் எண்ணிக்கை எண்ணற்றது. இச்சீடர்களில் 9 ஆண்டுகள் கற்றுக்ககொண்டவர்களும் இருந்தனர். இரண்டு அமெரிக்கப் பயணிகள், நேரம் குறைவினால், மூன்று நாள் மட்டுமே அவரிடம் கற்றுக்கொண்டனர். வெளிநாட்டுச் சீடர்களில், நுண்கலை ஆசிரியர்களும், கட்டிடக்கலைஞர்களும் இருக்கின்றனர். அவர்கள் ஓவியத் திறன்மிக்கவர்கள். தாங் கர் மீது அவர்கள் பெரும் அக்கறை கொண்டுள்ளனர்.

1  2  3