• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-07 18:59:33    
விளையாட தெரியும் பாபா நல்ல பாபா

cri
எங்க வீட்டு பாப்பாவுக்கு விளையாட மட்டும் தான் தெரியும். மற்றதை கற்றுக் கொள்ளும் ஆசையில்லை என்று சில பெற்றோருக்கு கவலை உண்டாகிறது. ஆனால் உங்கள் வீட்டு பாப்பாவுக்கு விளையாடத் தெரியாது என்ற சூழ்நிலை ஏற்பட்டால் உங்களுக்கு உண்மையிலேயே கவலை உண்டாக்கும். அல்லவா?

சில சமையங்களில் குழந்தை நன்றாகவே விளையாடும். பெரியவர்களின் பார்வையில் பொம்மை விளையாட்டு மட்டுமே முக்கியமாகத் தெரிகிறது. குழந்தைகளின் பார்வையில் அப்படி அல்ல. மரத்தின் ஒரு இலை குழந்தையில் பார்வையில் விமானம், கார், அவனின் மதிய உணவு என கற்பனை வளர்கிறது. இது விளையாட தெரியும் குழந்தையின் நிலைமை. சில குழந்தைகளிடம் இந்த நல்ல வழக்கம் இருப்பது இல்லை. அது மற்றவர்கள் விளையாடுவதை கண்டுரசிக்க விரும்புகின்றது. மற்ற குழந்தைகளின் கையில் இருப்பது போன்ற ஒரு பொம்மை இந்தக் குழந்தையின் கையில் வைக்கப்பட்டால் எப்படி விளையாடுவது எனத் தெரியாது. இது போன்ற விளையாட தெரியாத குழந்தைகளின் மன வளர்ச்சியில் எதோ பிரச்சினை உண்டு என்று சீனாவின் பெய்சிங் குழந்தையின் வளர்ச்சி ஆய்வகத்தில் பணிபுரிகின்ற டாக்டர் துங் கருத்து தெரிவிக்கின்றார். ஏனென்றால் குழந்தைகளின் விவேகம் மற்றும் மன வளர்ச்சி விளையாட அறிந்து கொள்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

1  2  3