நமது வாழ்க்கையில் பெற்றோர்கள் அடிக்கடி பணி சுமை காரணமாக நேரத்தை ஒதுக்கி குழந்தைகளுடன் விளையாடுவதில்லை. அதற்கு பதிலாக குழந்தைகளுக்கு பெற்றோர் பல விளையாட்டுப் பொருட்களை வாங்கிப் போடுகின்றனர். இந்த விளையாட்டுப் பொருட்கள் குழந்தைகள் விளையாடுவதன் மூலம் உருவாக்கும் கற்பனை வாய்ப்பை இழச் செய்யும் என்று டாக்டர் துங் கூறுகின்றார்.
இளம் பெற்றோர்கள் குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்பது பற்றிய பல வழிக்காட்டு நூல்களை படிக்கின்றார்கள் என்று நம்புகின்றோம். இந்த நூல்களில் எத்தனை வயதில் குவந்தை எப்படி விளையாடும் என்பது பற்றி வழிக்காட்டப்படுகின்றது. இவையனைத்தும் குழந்தை வளர்ச்சியை தரபடுத்தும் குறிக்கோள்களாகும். உங்கள் குழந்தை விளையாட தெரியாத வேளையில் முதலில் அவனுக்கு இயற்கையான வளர்ச்சி தாம்தமாகிறது என்று யோசிக்க வேண்டும். இந்த நிலையில் பெற்றோர்கள் வேண்டுமேன்றே குவந்தைக்கு விளையாடும் சூழ்நிலையை உருவாக்கினால் அதன் வளர்ச்சி சீரடையும் என்றார் டாகடர் துங்.
குழந்தை ஆரோக்கியமாக வளர்வதற்கு துணை புரியும் வகையில் அதனுடன் சேர்ந்து விளையாடுங்கள். வீட்டில் எட்டும் இடத்தில் விளையாட்டுப் பொருட்களை வைக்க வேண்டும். வீட்டில் குழப்பமாவது பற்றியும் அசுத்தமாவது பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. குழந்தைகள் சுத்தமான பாதுகாப்பான சூழ்நிலையில் விளையாடுவதற்கு உத்தரவாதம் செய்வதை பெற்றோர்கள் நிறைவேற்றினால் போதும். அப்போது தாராளமாக குழந்தையுடன் விளையாடுங்கள் இப்படி செய்தால் குழந்தை ஆரோக்கியமாக வளரலாம். பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் பணி புரியலாம். குடும்பத்தின் சூழ்நிலை இன்பமாக காணப்படலாம். அல்லவா 1 2 3
|