• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-10 11:01:47    
மெக்கா புனித யாத்திரிகர்களுக்கு வசதி

cri

ஒவ்வொரு ஆண்டிலும் முஸ்லிம் புனித யாத்திரை நடைபெறும் போது, உலகில் சுமார் பத்து லட்சம் முஸ்லிம்கள் சவூதிஅரேபியாவின் இஸ்லாமிய புனிதத்தலமான மெக்காவுக்குச் சென்று வழிபாடு செய்கின்றார்கள். அவர்களில் பலர், சீன முஸ்லிம்கள் ஆவர். இது பற்றி கூறுகின்றோம்.

மா சிங் லங் என்பவர், ஒரு மத போதகர். வடமேற்கு சீனாவின் நிங் சியா வே இனத் தன்னாட்சிப் பிரதேசத்தில் வாழ்கின்றார். அங்கு, முஸ்லிம்களின் முக்கிய குடியிருப்பு அமைந்துள்ளது. 3000க்கும் அதிகமான மசூதிகளும் இரண்டு இஸ்லாமிய மறைப் பள்ளிகளும் பல அரபு மொழிப் பள்ளிகளும் இருக்கின்றன. இவற்றின் போதகர் மா சிங் லங், ஊரிலுள்ள இஸ்லாமிய மறைப் பள்ளியில் படித்து பட்டதாரியானவர். தொழில்முறை மத போதகர் என்ற முறையில், தம் பொறுப்பிலுள்ள மத பிரதேசத்தின் நிலைமையை நன்கு தெரிந்துள்ளார். இப்போது ஆண்டுதோறும், மெக்காவுக்குச் சென்று புனித யாத்திரை மேற்கொள்வோரின் எண்ணிக்கை, அதிகரித்து வருவதாக, செய்தியாளரிடம் அவர் தெரிவித்தார்.

"கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆண்டுக்கு தலா பத்துக்கு மேலானோர் மெக்காவுக்குச் சென்றனர். இது முன்பு இருந்த எண்ணிக்கையை விட மிக அதிகம். அவர் கூறிய எண்ணிக்கையானது, சீன அரசின் ஏற்பாட்டில் மெக்காவுக்கு செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை ஆகும். பல்வேறு மாநிலங்களிலும் பிரதேசங்களிலும் சிதறி வாழும் முஸ்லிம்களின் எண்ணிக்கைக்கிணங்க, அரசு, ஒருங்கிணைந்த முறையில் எண்ணிக்கையை உறுதிப்படுத்தும். முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசமான Ning Xia வட்டாரத்துக்கு ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் மெக்காவுக்குப் போகலாம். இச்செயல், இது வரை 20 ஆண்டுகளுக்கு மேலாக கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. புனித யாத்திரைக்காக மெக்காவுக்குச் செல்லும் மிகப் பெரும்பாலான முஸ்லிம்களுக்கு அரபு மொழி பேச தெரியாது. ஆகவே, சீன அரசின் இந்நடவடிக்கை, அவர்களுக்கு பெரும் வசதியாக உள்ளது.

1  2  3