• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-10 11:01:47    
மெக்கா புனித யாத்திரிகர்களுக்கு வசதி

cri

சீனாவில், வே இனம், விகுர் இனம், கஸக்ஸ்தான் இனம், சரா இனம் துங் சியே இனம் உட்பட, பத்து தேசிய இனங்கள், இஸ்லாமிய மத நம்பிக்கையை கொண்டுள்ளன. அவற்றின் இரண்டு கோடி மக்கள் நாட்டின் பல்வேறு இடங்களில் சிதறி வாழ்கின்றனர். "குரான் திருமறையின்" படி, வாழ்நாள் முழுவதிலும் முஸ்லிம்களுக்கு ஐந்து முக்கிய பாடங்கள் உள்ளன. புனித யாத்திரை மேற்கொள்வது, அவர்களின் வாழ்வில் அதி முக்கியமான மதப்பாடமாகும். ஒரு முஸ்லிம் தமது பாடங்களை வெற்றிகரமாக நிறைவேற்றியதற்கு இது ஒரு அடையாளமாகத் திகழ்கின்றது. Ning Xia வே இன தன்னாட்சிப் பிரதேசத்தில், சுமார் 21 லட்சம் முஸ்லிம்கள் இருக்கின்றனர். தன்னாட்சிப் பிரதேசத்தின் இஸ்லாமிய மத சங்கத்தின் தலைவர் Xie Sheng Lin அறிமுகப்படுத்தியதாவது:

"கடந்த சில ஆண்டுகளில், மென்மேலும் அதிகமான வே இன முஸ்லிம்கள் இப்பாடத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு புனித யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என்று துடிக்கின்றனர். சீன அரசு மேற்கொண்டுள்ள தேசிய இன கொள்கையும், வளமடைந்துள்ள முஸ்லிம்கள் தமது விருப்பத்தை நனவாக்குவதற்கு அதிக வாய்ப்பு அளித்துள்ளது" என்றார்.

சில நாட்களுக்கு முன், Ning Xia வே இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் ஆயிரத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள், அரசின் ஒருங்கிணைந்த ஹஜ் யாத்திரை குழுவில் கலந்து கொண்டு சிறப்பு விமான மூலம் மெக்காவுக்குச் சென்றனர். 40 வயதான Fadima Linxianglian அம்மையார், இவ்வாண்டு சீன ஹஜ் யாத்திரை சென்ற குழுவில் ஒருவர். அவள், செயல்திறன்மிக்க தொழில் முனைவோர். நில பேரம் நிறுவனமும் உணவு விடுதி நிறுவனமும் அவருக்கு உண்டு. தற்போதைய மெக்கா வழிபாடு பற்றிக் குறிப்பிட்ட போது, அவள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கூறியதாவது:

"அந்த ஆண்டுகளில், குடும்பம் மிகவும் வறுமை நிலையில் இருந்தது. ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்கு பணமில்லை. சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத்திறப்பு கொள்கை நடைமுறைக்கு வந்த பின்னரே அங்கு போக வாய்ப்பும் பணமும் கிடைத்தது." என்றார்.

1  2  3