• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-10 11:01:47    
மெக்கா புனித யாத்திரிகர்களுக்கு வசதி

cri

ஒவ்வொரு யாத்திரிகளுக்கும் சுமார் 30 ஆயிரம் யுவான் தேவை. தம்மையும் இதர முஸ்லிம்களையும் பொறுத்த வரை இது ஒரு பிரச்சினையில்லை" என்று லீங் அம்மையார் கூறினார்.

சீன முஸ்லிம்கள் வலுவான வியாபார உணர்வுடையவர்கள். கடந்த சில ஆண்டுகளில், வணிகத்தில் ஈடுபடுவதன் மூலம் வளமடையுமாறு அரசு அனைவருக்கும் ஊக்கமளித்துள்ளதால், பல முஸ்லிம்கள், வணிகத் துறையின் சிறந்தவர்களாகியுள்ளனர். சிலர் தொழில் நிறுவனங்களின் உரிமையாளராக மாறியுள்ளனர். பல கோடி சொத்துடையவர்களும் அவர்களில் காணப்பட்டுள்ளனர். சிலருக்கு பத்து கோடி யுவான் சொத்து பெற்றுள்ளனர். ஆண்டுக்கு பத்தாயிரம் யுவான் வருமானம் பெறுவோரின் எண்ணிக்கையும் குறைவல்ல.

வளம், முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்கு பொருள் உத்தரவாதம் அளித்துள்ளது. இப்பணியில் அரசு காட்டியுள்ள கவனம், அவர்களின் ஹஜ் யாத்திரைக்கு உத்தரவாதமும் ஆதரவும் அளித்துள்ளது. கடந்த நூற்றாண்டின் 80ம் ஆண்டுகளின் பிற்பகுதியில், சீன இஸ்லாமிய சங்கம், ஆண்டுதோறும் சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்து தருகின்றது. இவ்வாறு முஸ்லிம்கள், பெய்சிங்கிலிருந்து நேரடியாக மெக்காவுக்குச் செல்கின்றனர். விமானத்தில், அரபு மொழி பெயாப்பாளர்கள் மற்றும் முஸ்லிம் மருத்துவர்களின் துணையுடன் செல்கின்றனர். இதன் மூலம், ஹஜ் யாத்திரிகர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகின்றது. ஹஜ் யாத்திரைக்கு முன் சீன யாத்திரிகர்களின் உணவு, உறைவிடம், போக்குவரத்து வசதிகளுக்கு ஏற்பாடு செய்து தரும் வகையில், இஸ்லாமிய சங்கம், முன்னதாக ஆட்களை சவூதி அரேபியாவுக்கு அனுப்புகின்றது. அவர்கள் அங்கு சென்ற பின், தொடர்புடைய துறைகளுடன் தொடர்பு கொண்டு கலந்தாய்வு நடத்துகின்றனர்.

மேற்கு சீனாவின் Gan Su, Ning Xia, Qing Hai முதலிய மாநிலங்கள்-பிரதேசங்களின் முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்கு வசதியாக முஸ்லிம்கள் செறிந்து வாழும் மேற்கு பகுதியில் Lan Zhou நகரிலிருந்து சவூதிஅரேபியாவுக்குச் செல்லும் நேரடி விமானப் போக்குவரத்தை சீன அரசு கடந்த ஆண்டில் முதன்முதலாக திறந்து வைத்துள்ளது. Ning Xia வே இன தன்னாட்சி பிரதேசத்தின் மத பணியகத்தின் Jin Xiao Lin அம்மையார் கூறியதாவது:

"முன்பு, எங்கள் Ning Xia முஸ்லிம்கள், ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் போது, முதலில் பெய்சிங் வந்து, பின்னர், பெய்சிங்கிலிருந்து சர்வதேச விமானம் மூலம் வெளிநாட்டுக்கு போக வேண்டும். ஹஜ் யாத்திரை முடிவடைந்த பின், முதலில் பெய்சிங் திரும்பிய பின், பெய்சிங்கிலிருந்து வீடு திரும்ப வேண்டும். இந்த ஒழுங்குமுறை சிக்கல் மிகுந்தது. நேரம் அதிகம். இப்போது Ning Xia முஸ்லிம்கள் Lan Zhou நகரிலிருந்து விமான மூலம் 16 மணிநேரத்தில் சவூதிஅரேபியாவுக்கு செல்லலாம். இவ்வாறு ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் முஸ்லிம்களுக்கு அதிக நேரம் சிக்கனமாகி விடும். செலவும் குறைக்கப்படும்" என்றார்.


1  2  3