• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-15 07:48:58    
சீன விவசாயிகளின் மகிழ்ச்சியான வாழ்க்கை

cri

130 கோடி மக்கள் தொகையுள்ள சீனாவில், பெரிய வேளாண் நாடு என்ற முறையில், 80 கோடிக்கு அதிகமான விவசாயிகள் உள்ளனர். நகரவாசிகளுடன் ஒப்பிடும் போது, விவசாயிகளின் வாழ்க்கை தரம் ஓரளவில் பின்தங்கியதாக உள்ளது. எனவே, கடந்த சில ஆண்டுகளாக, இந்த நிலைமையை மாற்றுவது, சீனாவின் பல்வேறு நிலை அரசுகளின் முக்கிய பணியாகவும் சமூகத்தின் கவனத்திற்குரிய பிரச்சினையாகவும் திகழ்கிறது. கடந்த ஆண்டில் சீனாவின் பல்வேறு இடங்களிலும் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன? அவற்றின் பயன் என்ன?

கடந்த சில ஆண்டுகளுக்கு முன், சீனாவின் நடுப்பகுதியிலுள்ள ஹேநான் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி Luo Chuan Yuan வட கிழக்கு பகுதியில் அமைந்துள்ள லியௌநிங் மாநிலத்தின் தாலியான் நகரில் கட்டிட வேலை செய்யத் துவங்கினார். கடந்த ஆண்டின் தொடக்கத்தில் அவருடைய வலது கால் வேலையின் போது உடைந்து விட்டது. மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்து கட்டணத்தை கட்ட அவரை வேலைக்கு வைத்த நிறுவனம் தயாராக இல்லாததால், ஏழையான Luo Chuan Yuanனின் குடும்பம் மிகவும் கஷ்டப்பட்டது. பின்னர், தொழில் சங்கத்தை அவர் நாடினார். அவர் கூறியதாவது—

"இந்த பிரச்சினையை நான் தனியாக தீர்க்க முடியாது. ஒரு அமைப்பின் மூலம் தீர்ப்பது நல்லது. எனவே நான் தொழில் சங்கத்துக்குச் சென்று, இந்த பிரச்சினையை தீர்க்க உதவுமாறு கேட்டு கொண்டேன். ஒரு மாதத்துக்குள் மருத்துவ சிகிச்சை கட்டணத்திற்காக 60 ஆயிரம் யுவான் இழப்பீட்டை அந்த கட்டிட தொழில் நிறுவனம் எனக்கு வழங்கியது" என்றார் அவர்.

1  2  3