• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-15 07:48:58    
சீன விவசாயிகளின் மகிழ்ச்சியான வாழ்க்கை

cri

அண்மையில் ஹேநான் மாநிலத்தில் எமது செய்தியாளர் Luo Chuan Yuanஐ சந்தித்தார். அவருக்கு செயற்கை கால் பொருத்தப்பட்டிருந்தது. தமது வீட்டை அவர் பழுது பார்த்து, புதிய வாழ்க்கையை நடத்துகிறார். பயிரிடுவது, பழ மரங்களை நடுவது மற்றும் பன்றிகளை வளர்ப்பதன் மூலம் கிடைக்கும் வருமானம் தவிர, ஒவ்வொரு மாதத்திலும் அவர் சிறப்பு உதவி தொகையும் பெறலாம்.

சீனாவில் நகரமய வளர்ச்சியுடன், Luo Chuan Yuan போன்று கிராமத்திலிருந்து நகருக்குச் சென்று வேலை செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை 12 கோடியை எட்டியுள்ளது. நகரங்களில் தொழில் விபத்து, ஊதியப் பாக்கி வழங்கப்படாதது போன்ற பிரச்சினைகளை அவர்களுக்கு ஏற்படுகின்றன. இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, கடந்த இரு ஆண்டுகளில் சீன அரசவை சிறப்பு ஆவணங்களை வெளியிட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களும் நகரங்களும் ஊதியப் பாக்கியை வழங்கிட சிறப்பு குழுகளை உருவாக்கியுள்ளன. Luo Chuan Yuanஇன் கிராமத்தைச் சேர்ந்த, Yin Jia Qi தாலியான் நகரில் வேலை செய்கிறார். அவர் கூறியதாவது—

"வீடு மற்றும் நில உடைமை துறை நிறுவனத்தில் வேலை செய்தேன். பிற்பாதியில் எனக்கு ஊதியம் கிடைக்கவில்லை. விவசாயிகளின் ஊதியம் வழங்குவதை ஒத்திப் போடக் கூடாது என்பது பற்றி மத்திய அரசு வகுத்த சட்டவிதியைப் பார்த்த பிறகு, தொழிலாளர் நலன் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு துறையிடம் எனது பிரச்சினை பற்றி தெரிவித்தேன். இத்துறையின் பணியாளர்களின் உதவியுடன் எனக்கு ஊதியம் கிடைத்தது. விவசாயிகள் ஊதியப் பாக்கியைப் பெறுவதில் தாலியான் நகரம் செவ்வனே செயல்படுகிறது" என்றார் அவர்.

தவிர, மற்றொரு நிகழ்ச்சி Yin Jia Qi என்பவருக்கு மகிழ்ச்சி தந்துள்ளது. ஏனெனில், தாலியான் நகரிலுள்ள துவக்கப்பள்ளியில் கல்வி பயில்வதற்கான 600 யுவான் மதிப்புள்ள சிறப்பு கூட்டு கல்வி கட்டணத்தை அவரின் மகள் கட்ட வேண்டாம். வெளியூரிலிருந்து நகரத்துக்குச் சென்று வேலை செய்யும் விவசாயிகளின் உரிமை மற்றும் நலனுக்கு உத்தரவாதம் தருவதற்காக சீன அரசு மேற்கொள்ளும் மற்றொரு நடவடிக்கை இது.

நகரங்களில் வேலை செய்யும் விவசாயிகளின் உரிமைக்கும் நலனுக்கும் உத்தரவாதம் தருவதோடு, தங்களது கிராமத்தில் தங்கியிருக்கும் விவசாயிகளின் வாழ்க்கையும் மேலும் நன்றாக உள்ளது. Luo Chuan Yuan மற்றும் Yin Jia Qiயின் வீடுகளுக்கும் அருகில் விவசாயி Cheng Shan Junனின் வீடு உள்ளது. விசாலமான முற்றம், முற்றத்தின் வட பகுதியிலுள்ள இரண்டு மாடி கட்டிடம் ஆகியவை அவரது குடும்பத்தின் ஓரளவு வசதியான வாழ்க்கையை பிரதிபலிக்கின்றன. தமது குடும்பத்தில் 5 பேர் உள்ளனர். 0.4 ஹெக்டர் வயலில் காய்கறிகள், கோதுமை மற்றும் நெல் பயிரிடுகின்றோம். எனது தம்பி வெளியூரில் வேலை செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைச் சேர்த்தால், ஆண்டுக்கு மொத்த வருமானம் குறைவாக இல்லை என்று 40 வயதான Cheng Shan Jun செய்தியாளரிடம் கூறினார். மேலும் அவர் கூறியதாவது—

"எங்கள் மாநிலம் முழுவதிலும் வேளாண் வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்பு தனிநபரின் ஆண்டுக்கு வேளாண் வரி 200 யுவானுக்கு மேலாக இருந்தது. இந்த வரி ரத்து செய்யப்பட்டதால், என் குடும்பம் கட்ட வேண்டிய வரி 1400 யுவான் குறைந்தது" என்றார் அவர்.

1  2  3