
இவ்வாண்டு முதல், நாடு முழுவதும் வேளாண் வரி ரத்து செய்யப்படும். விவசாயிகளின் வாழ்க்கை தரம் மேலும் மேம்பட்டு விடும்.
சுமை குறைக்கப்படுவதோடு, விவசாயிகளின் வாழ்க்கையின் மேம்பாடு இதர பல துறைகளிலும் பிரதிபலிக்கிறது. எடுத்துக்காட்டாக, விவசாயிகளுக்கு மருத்துவ காப்பீடு பற்றாக்குறை என்ற பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, தற்போது, சீனாவில் 20 விழுக்காடு மாவட்ட நிலை நிர்வாக பகுதிகளில், புதிய ரக கிராமப்புற கூட்டுறவு மருத்துவ சேவை சோதனை முறையில் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த கூட்டுறவு மருத்துவ சேவை முறையில் சேர்ந்தால், ஒவ்வொரு விவசாயியும் 10 யுவான் மட்டுமே செலுத்த வேண்டும். உள்ளூர் அரசு மற்றும் மத்திய நிதி துறை உதவி தொகை வழங்கும். நோய்வாய்ப்பட்டால், சுமார் 20 விழுக்காடு மருத்துவ மற்றும் சிகிச்சை கட்டணத்தை விவசாயிகள் கட்டினால் போதும். உள்ளூர் அதிகாரி ஒருவர் கூறியதாவது—
"தற்போது விவசாயிகளுக்கு உணவு பிரச்சினை, போக்குவரத்து பிரச்சினை, குழந்தைகளுக்கு கல்வி பிரச்சினை ஆகியவை தீர்க்கப்பட்டுள்ளன. விவசாயிகள் மருத்துவ சிகிச்சை பெறுவதில் கடினம், கடுமையாக நோய்வாய்ப்பட்டவர் பெரும் தொகையுள்ள சிகிச்சை கட்டணத்தை கட்ட முடியாத பிரச்சினை ஆகியவை செவ்வனே தீர்க்கப்பட்டால், விவசாயிகள் மேலும் ஒளிமயமான எதிர்காலத்தைக் காணலாம்" என்றார் அவர். 1 2 3
|