• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-16 20:16:52    
நட்பு பரவியுள்ள சீன கடற்படை கப்பல் அணி

cri

ராஜா...கடந்த சில ஆண்டுகளாக இந்தியா, சீனா பாகிஸ்தான் மூன்று நாடுகளின் ராணுவங்களிடையே தொடர்புகள் அதிகரித்துள்ளன.

கலை.....ஆமாம். நவெம்பர் திங்கள் 21ம் நாள் முதல் சீன கடற்படைக் கப்பல் அணி பாகிஸ்தானிலும் இந்தியாவிலும் பயணத்தை துவக்கியுள்ளது..

ராஜா....எனக்கு தெரியும். "சென்சுன்"என்னும் ஏவுகணை விரைவுக் கப்பல்,"வெய்சான்ஹூ"என்னும் போர்க் கப்பலும் இடம் பெறும் சீன கடற்படைக் கப்பல் அணி கடந்த 21ம் நாளன்று பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தை சென்றடைந்து பாகிஸ்தானில் 3 நாள் நட்பு பயணத்தை துவக்கியது.

கலை......நட்பு பயணம் தவிர பன்னாட்டு கூட்டு ராணுவ ஆற்றலை வலுப்படுத்தும் வகையில் சீனா இந்தியா பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து கடற்பயிசியை மேற்கொள்ள வேண்டும். 

ராஜா.....ஆமாம். சீன கடற்படைக் கப்பல் அணியும் பாகிஸ்தான் கடற்படையும் இணைந்து "சீன-பாகிஸ்தான் நட்பு-2005"எனும் கூட்டு பயிற்சியை அரபு கடலின் வடக்குப் பரப்பில் மேற்கொண்டன.

கலை.....இது மட்டுமல்ல பயணத்தில் சீனக் கடற்படைக் கப்பல் அணி உள்ளூர் மக்களிடையில் தொடர்பு கொண்டது. பாகிஸ்தான் கடற்படை அருங்காட்சியகம், கடற்படை கப்பல் கட்டும் கூடம், கடற்படையின் ராணுவ பயிற்சி தளம், கடற்படையின் தொழில் பயிற்சி தளம், கடற்படை கல்லூரி ஆகியவற்றை சீனக் கடற்படை அதிகாரிகள் அணி பார்வையிட்டனர்.

ராஜா....பாகிஸ்தான் செய்தி ஊடகம் சீனக் கடற்படைக் கப்பல் அணியின் பயணத்தால் சகோதர உணர்வு மேலும் ஆழமாகும் என்று பாராட்டுகின்றது.

1  2  3