• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-24 14:46:39    
ஐரோப்பாவில் மங்கோலிய ஆயர்களின் பயணம்

cri

ஹெர்தோஸ்

அண்மையில், வட சீனாவின் உள்மங்கோலிய புல்வெளியைச் சேர்ந்த 13 ஆயர்கள் ஐரோப்பாவில் பயணம் மேற்கொண்டனர். ஜெர்மனி, பிரான்சு, நெதர்லாந்து, பெல்ஜியம் முதலிய நாடுகளில் கால்நடை வளர்ப்புத்தொழிலை நேரில் கண்டறிந்தனர். ஏன் அவர்கள் ஐரோப்பாவுக்குப் போக வேண்டும்? அவர்கள் என்ன கண்டார்கள் என்ற கேள்விகளுடன் எமது செய்தியாளர் இந்த ஆயர்களைப் பேட்டி கண்டார்.

37 வயதான மங்கோலிய இன ஆயர் இராடு, உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தின் மேற்கிலுள்ள ஹெர்தோஸ் பீடபூமியில் வசிப்பவர். அவருடைய குடும்பத்துக்கு சுமார் 500 கால்நடைகள் இருக்கின்றன. வெளிநாட்டுப் பயணம் முடிந்து நாடு திரும்பியதும், அவர், தனது குடும்பத்தின் கால்நடை வளர்ப்புத் தொழிலைச் சரிப்படுத்தினார். கறவை மாடுகளை அதிகமாகவும், வெள்ளாடுகளை குறைவாகவும் வளர்ப்பதென அவர் முடிவு செய்தார். அவர் கூறியதாவது:

"நான் சென்ற இந்நாடுகளில், கறவை மாட்டு வளர்ப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பால் பொருட்கள் உள்ளூர் மக்களின் முக்கிய உணவுகளில் ஒன்றாகும். மறுபுறம், இறைச்சி வகை தொழிலை வளர்ப்பதிலும் அவை கவனம் செலுத்துகின்றன. தொழில் மயமாக்கம் அதிகரித்துள்ளது. ஆடு-மாடு வெட்டப்படும் இடங்களில் முன்னேறிய சாதனங்கள் உள்ளன. சுகாதார நிலைமை நல்லது. எடுத்துக்காட்டாக, ஒரு மாடு வெட்டப்படும் போது, அது வளர்க்கப்படும் இடம், அதை வெட்டுவோர், வெட்டப்படும் நேரம் முதலியவை தெளிவாக எழுதப்படுகின்றன. இதனால், இறைச்சியின் தரத்திற்கு உத்தரவாதம் செய்யப்படுகின்றது. எனவே, அவற்றின் இறைச்சி ஏற்றுமதி அதிகமானது" என்றார்.

1  2  3