
வளர்ப்பு முறையின் மாற்றம், விவசாயிகள்-ஆயர்களின் கருத்திலும் மாற்றம் ஏற்படுத்தியுள்ளது. புல் பயிரிடுவதில் எவ்வாறு சிறந்த பயன் பெறுவது, கறவை மாடுகளில் கூடுதலாக பால் கறப்பது எப்படி, பாலை எவ்வாறு பதனிடுவது, ஆடுகளை எவ்வாறு கொழுக்க வைப்பது என்றெல்லாம், புரிந்து உள்ளூர் ஆயர்கள் அதிகமாக பேசுகின்றனர். கால்நடை வளர்ப்பு பிரதேசமான ஹெர்தோஸ், நவீன கால்நடை வளர்ப்புத் தொழிலை வளர்க்க வேண்டுமாயின் அறிவியல் தொழில் நுட்ப அறிவுடைய, புத்தாக்கம் செய்யத் துணிச்சல் மிக்க ஆயர்கள் தேவை என்பதை கருத்தில் கொண்ட நகராட்சி அரசு, 100க்கும் அதிகமான கால்நடை வளர்ப்புக் குடும்பங்கள் வெளிநாட்டிற்குப் போய் முன்னேறிய நுட்பத்தை நேரில் கண்டு அனுபவம் பெற வேண்டும் என, முடிவு எடுத்துள்ளது.
13 நாட்கள், இந்த 5 நாடுகளில் பயணம் செய்து, முன்னேறிய மாடு-ஆடு வளர்ப்புத்தொழில் நிறுவனங்கள், கால்நடை உற்பத்திப் பொருட்களின் பதனீட்டு தொழில் நிறுவனங்கள், விவசாய கால்நடை வளர்ப்புத்தொழில் இயங்திரங்களின் பயன்பாட்டு நிலைமை ஆகியவற்றை கண்டு அறிந்தனர். ஜெர்மன் விவசாய கால்நடை வளர்ப்புத் தொழில் நிபுணர்களின் வழிகாட்டலில், கால் நடை இனத்தைச் சிறக்கச் செய்யும் தொகுதி, கால்நடை வளர்ப்புத்தொழிலின் நோய் தடுப்புத் தொகுதி முதலியவை தொடர்பான பயிற்சி பெற்றனர்.

நேரில் கண்டதன் மூலம், ஆயர்கள், நவீன கால் நடை வளர்ப்புத் தொழிலை மேலும் புரிந்து கொண்டனர். ஊர் திரும்பியதும், தங்களது கால்நடை வளர்ப்புத் தொழிலை சரிப்படுத்தி மேம்படுத்தியுள்ளனர். அன்றி, வெளிநாட்டில் தாம் கண்டதையும் கேட்டதையும் தமது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கிராமவாசிகளுக்கும் எடுத்துக்கூறி, சீர்திருத்தம் மேற்கொள்ளுமாறு அவர்களுக்கு ஊக்கமளித்தனர்.
ஹெர்தோஸ் ஆயர்களின் கண்பார்வை விரிவடைந்துள்ளது. உள்ளூர் கால்நடை வளர்ப்புத்தொழிலின் வளர்ச்சியை இது விரைவுபடுத்தியுள்ளது. ஹெர்தோஸ் விவசாய கால்நடை வளர்ப்புத்துறையின் தலைவர் மா தின் சு பேசுகையில், இப்போது ஹெர்தோஸ் பிரதேசத்தின் புல்தரை பசுமையாக காட்சியளிக்கின்றது. மாட்டுப்பால்-இறைச்சி பதனீட்டுத் தொழில் நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. ஆயர்களின் வாழ்க்கையும் வளமடைந்துள்ளது என்றார்.
"விவசாயிகளும் ஆயர்களும் வெளிநாட்டில் கற்றுக்கொண்டு ஊர் திரும்பிய பின், அவர்களின் உற்பத்தியில் பயன் அதிகம். வெளிநாட்டின் விவசாய கால் நடை வளர்ப்புத்தொழிலின் நிர்வாக முறை, கருத்து ஆகியவற்றைக் கற்றுக் கொண்டு நாடு திரும்பிய பின், உள்ளூருக்கு அவர்கள் ஆற்றியுள்ள பங்கு மிகப் பெரியது. ஒரு குடும்பம், பத்து குடும்பங்களுக்கு உந்துவிசையாகவும், பத்து குடும்பங்கள், நூறு குடும்பங்களுக்கு உந்துவிசையாகவும் இருக்கின்றன. உள்ளூர் பொருளாதாரத்துக்கும் விவசாய கால்நடை வளர்ப்புத்தொழிலின் வளர்ச்சிக்கும் இது உந்துவிசை பங்காற்றியுள்ளது." என்று மா தி சு சொன்னார். 1 2 3
|