• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-28 17:23:51    
ஜலதோஷம் தடுப்பு மருந்து தெரிவு

cri
குளிர் காலத்தில் ஜலதோஷம் பிடிக்கும் காலமாகும். ஜலதோஷம் பிடித்ததும், தலைவலி, காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறிகள் காணப்படும். இயல்பாக வேலை செய்ய முடியாமல் போகும். பலர் ஜலதோஷம் பிடித்ததும் டாக்டரை பார்ப்பதற்கு பதிலாக தாங்களாகவே மருந்து கடைக்குப் போய் மருந்தை வாங்குவர். ஜலதோஷத்திற்கு நூற்றுக்கு மேலான மருந்துவகைகள் உள்ளன. சரியான மருந்தை எவ்வாறு தெரிவு செய்வது என்பது பற்றி இன்று பேசுகின்றார் தி. கலையரசி.

இன்று சொல்லலப்போகும் ஜலதோஷம் சாதாரண நோய் தான். தொற்றுநோய் ஜலதோஷம் இல்லை. சாதாரண ஜலதோஷம் பல நோய் கிருமிகள் தொற்றி மூச்சுக் குழாய் அழற்சி ஏற்படும் ஜலதோஷமாகும். இது வாழ்க்கையில் அடிக்கடி ஏற்படக் கூடிய நோயாகும். பலர் ஆண்டுக்கு பல முறை அல்லல்படுவார்கள். இது சாதாரண நோய் அல்ல. மக்கள் விழிப்புடன் இதை கையாள வேண்டும். பெய்சிங் தூங்ரன் மருத்துவ மனையின் சுவாச நோய்த் துறை டாக்டர் சன் தூங் நின் அம்மையார் இது பற்றி கூறியதாவது 

ஜலதோஷம் பிடித்ததும் சரியான முறையில் சமாளிக்க வில்லை என்றால் மற்ற பகுதிகள் பாதிக்கப்படும். மூச்சுக் குழாய் பகுதி மனித உடம்பில் முக்கிய போக்குவரத்து தடமாக செயல்படுகின்றது. அது நோய்வாய்பட்டால் நடு காது குழாயும் கீழ் மூச்சு குழாயும் பாதிக்கப்படும். கடுமையாகும் போது மண்ணீரல், இருதயம் அழற்சி நிகழும். மற்ற உடம்பு பாகங்களும் பாதிக்கப்படும். ஆகவே ஜலதோஷம் வராமல் தடுக்க மருந்து உட்கொள்வது மிகமும் முக்கியமானது. அவசியமானது என்றார் அவர்.

இப்போது சீனாவில் ஜலதோஷம் பிடித்ததும் நேரடியாக மருந்து கடையிலிருந்து மருந்தை வாங்கலாம். ஒரே மாதிரி பயன் மிக்க பல்வகை ஜலதோஷம் தடுப்பு மருந்துகளை எப்படி தெரிவு செய்வது என்பது பற்றி பெய்சிங்கிலுள்ள ஒரு மருந்து கடையில் விற்பனையானர் செல்வி வுவாங் கூறியதாவது மருந்து வாங்க வந்தவர்கள் பொதுவாக விளம்பரத்தில் பிரசாரம் செய்யப்படும் மருந்தை கேட்டு வாங்குவார்கள்.


1  2  3