• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-28 17:23:51    
ஜலதோஷம் தடுப்பு மருந்து தெரிவு

cri
இந்த மருந்துகளில் பெரும்பாலானவை சில பெரிய மருந்து தயாரிப்பு தொழிற்சாலைகளில் தயாரிரானவை அதன் சிகிச்சை பயனுக்கு உத்தரவாதம் உண்டு. மருந்து பயன் தவிர, அதன் பக்க விளைவு பற்றியும் மக்கள் கவலை படுகின்றனர் என்றார். ஜலதோஷம் பிடித்ததும் முக்கியமாக அதற்கு உகந்த மருந்து உட்கொள்ள வேண்டும். இது வரை அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும் மருந்து கண்டுப்பிடிக்கப்பட வில்லை. ஜலதோஷம் பல வகைகளில் வருகிறது. ஆகவே ஒருவர் தனது உடல் நிலைக்கு ஏற்ற மருந்தை தெரிவு செய்ய வேண்டும். தற்போது மேலை நாட்டு ஜலதோஷம் தடுப்பு மருந்துகள் 3 வகைகளில் உள்ளன. ஒன்று காய்ச்சலையும் தலை வலியையும் குறைக்கும் மருந்து. இரண்டாவது ரத்த குழாயை சுருக்கி மூக்கடைப்பு, சளி போன்ற நிலைமையை குறைக்கும் மருந்து. மூன்றாவது நுட்பமான தடுப்பு மருந்தாகும். இருமல் சளி போன்ற நிலைமையை இந்த மருந்து தடுக்க முடியும்.

தற்போது மருந்தில் உள்ள அம்சங்கள், எப்படி உட்கொள்வது என்பது பற்றி துண்டு வெளியீட்டில் விளக்கப்பட்டுள்ளது. மருந்தை வாங்கும் போது உடல் நிலைக்கு ஏற்ப தெரிவு செய்ய வேண்டும். இது மட்டுமல்ல மருந்தின் பக்க விளைவை தெளிவுபடுத்த வேண்டும். இது மிக முக்கியமானது. எடுத்துக்காட்டாக, பெருமளவில் காய்ச்சலை குறைக்கும் ஜலதோஷம் தடுப்பு மருந்தை உட்கொண்டால் மண்ணீரலின் திறன் பலவீனமாகும். ஆகவே மண்ணீரல் பலவீனமானவர்கள் இத்தகைய மருந்தை தெரிவு செய்ய கூடாது. உயர் ரத்த அழுத்தம் கொண்ட நோயாளிகளுக்கும் இருதய நோயாளிகளுக்கும் ஜலதோஷம் பிடிக்கும் போது ரத்த குழாய் சுருங்கும் ஜலதோஷம் தடுப்பு மருந்தை நுணுக்கமாக தெரிவு செய்ய வேண்டும். ஜலதோஷம் பிடிக்கும் போது ஆன்ட்டிபயாட்டிக் மருந்தை உட்கொள்ளக் கூடாது. ஏனென்றால் உடம்பில் ஆன்ட்டிபயாட்டிக் மருந்தை எதிர்க்கும் சக்தி அதிகரிக்கும். ஜலதோஷம் பிடிக்கும் போது கிருமி தொற்றப்படும் நிலைமை அல்லது நுரையீரலில் அழற்சி ஏற்பட்ட போது ஆன்ட்டிபயாட்டிக் மருந்தை உட்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இதை உட்கொள்ளலாம். இல்லையென்றால் உட்கொள்ள வேண்டாம்.

1  2  3