• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-03-01 18:12:28    
வங்காளதேச இளைஞர் தெளஃபீக்

cri

சீனாவுக்கு வந்துள்ள அன்னிய நண்பர்கள் பலரை பொறுத்த வரை, நீண்டகால வரலாறுடைய ஒளிவீசும் சீனப் பண்பாடு மீது அவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது. வங்காள தேச இளைஞர் தெளஃபீக் அவர்களில் ஒருவர். 8 ஆண்டுகளுக்கு முன், கல்வி பயில சீனாவுக்கு வந்த அவர், இங்கு கற்றுக் கொண்டு, வாழ்ந்து வருகின்றார். சீனாவை தமது இரண்டாவது ஊர் என அவர் கருதுகின்றார்.

பெய்ஜிங்கில் உள்ள புகழ் பெற்ற சிங் ஹுவா பல்கலைக்கழகத்தில், தெளஃபீகை செய்தியாளர் சந்தித்தார். சீனா மற்றும் சீனப் பண்பாடு மீது தாம் கொண்டுள்ள ஆர்வத்தை செய்தியாளரிடம் அவர் சீன மொழியில் சரளமாக தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"சீனாவுக்கு ஒளிவீசும் பண்பாடு உண்டு. கலை மற்றும் பண்பாட்டைப் பொறுத்த வரை, இத்தகைய இடத்தை நான் விரும்புகின்றேன். ஏனெனில், இங்கு நான் மகிழ்ச்சி அடைகின்றேன். வங்காளதேசத்துக்கு ஒரு முறை நான் போய் வந்தேன். வங்காளதேசத்தில் ஒரு திங்கள் மட்டும் தங்கியிருந்த போது, சீனாவுக்கு திரும்ப நான் விரும்பினேன். சீனாவுக்கு திரும்பிய பின், வீட்டில் இருப்பது போல உணர்ந்தேன்." என்றார் அவர்.

1998ஆம் ஆண்டின் செப்டம்பர் திங்கள், வங்காளதேசத்தின் தாக்கா பல்கலைக்கழகத்தில் மண்பாண்ட தயாரிப்புக் கலையை கல்வி பயின்ற தெளஃபீக், தமது ஆசிரியரின் பரிந்துரையுடன், மண்பாண்டம் அதிகமாக தயாராகும் சீனாவுக்கு வந்து, சிங் ஹுவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நுண் கலை கல்லூரியின் மண்பாண்டச் சிறப்புத் துறையில் கல்வி பயிலத் துவங்கினார். இதற்கு பின், சிறந்த மதிப்பெண்ணுடன், இப்பல்கலைக்கழகத்தின் கண்ணாடி கலை சிறப்புத்துறையில் முதுகலைப் பட்டதாரியானார். அவர், இத்துறையில் கல்வி பயிலும் முதலாவது வங்காளதேச நாட்டவர். கடந்த ஆண்டின் ஜுலை திங்களில், தமது கண்ணாடி படைப்பு காட்சியை நடத்தினார். அவர், சிங் ஹுவா பல்கலைக்கழகத்தில், தனிநபர் பொருட்காட்சியை நடத்தும் முதலாவது வெளிநாட்டு மாணவராவார்.

1  2  3