• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Thursday    Apr 10th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-03-01 18:12:28    
வங்காளதேச இளைஞர் தெளஃபீக்

cri

இப்பொருட்காட்சியில், தெளஃபீகின் சாதனையை சீனாவில் உள்ள வங்காளதேசத் தூதுவர் Masud Manna பாராட்டினார்.

"வங்காள தேச இளம் கலைஞர் தெளஃபீக் வெளிநாட்டில் தனிநபர் படைப்பு காட்சியை நடத்துவதைக் கண்டு, நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். கலையைக் கற்றுக் கொள்ளும் அன்னிய மாணவர்களுக்கு இத்தகைய பொருட்காட்சி பெரிதும் ஊக்கமளித்துள்ளது என்று நான் கருதுகின்றேன். இனிமேல், இத்தகைய நடவடிக்கைகளுக்கு உதவி அளிப்பதற்கு இயன்றதனைத்தையும் செய்வோம்." என்றார் அவர்.

தாம் கல்வி பயிலும் சிறப்புத்துறையைத் தவிர, சீனாவின் பாரம்பரிய பண்பாடுகளின் ஆராய்ச்சியில் தெளஃபீக் விரிவான முறையில் ஈடுபட்டு, சில சாதனையை பெற்றுள்ளார். சிங் ஹுவா பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற முதலாவது ஆண்டில், சீனாவின் அழகு கை எழுத்து மற்றும் ஓவியத்துடன் தெளஃபீக் முதன்முதலாகத் தொடர்பு கொண்டார். அப்போது முதல், சீனாவின் அழகு கை எழுத்து மற்றும் ஓவிய கலையை அவர் நேசிக்கின்றார். நாள்தோறும் அவர் கை எழுத்து மற்றும் சீன ஓவியத்தை வரைந்து பயிற்சி செய்கின்றார். தவிர, கலை கல்லூரிக்கு அவர் வந்து, ஓவிய முறையை கற்றுக்கொள்கின்றார்.

கடந்த ஆண்டின் செப்டம்பர் திங்கள், கிழக்கு சீனாவின் Zhe Jiang மாநிலத்தின் Hu Zhou நகரில் அன்னியரின் கை எழுத்து மற்றும் ஓவிய போட்டி நடைபெற்றது. சீனாவில் வேலை செய்து, கல்வி பயின்று, வாழும் 100க்கு அதிகமான அன்னிய நண்பர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். இப்போட்டியில் தெளஃபீக் இரண்டாவது பரிசு பெற்றார்.

சீன ஓவியத்தைத் தவிர, சீனாவின் cross talk, opusculum, இசை நாடகம் உள்ளிட்ட பாராம்பரிய பண்பாட்டுக் கலை மீது அவர் ஆர்வம் கொள்கின்றார். சீனாவின் cross talk நிபுணர் Ding Guang Quanஐ ஆசானாக ஏற்று, கல்வி பயில்கின்றார். Ding Guang Quan செய்தியாளரிடம் பேசுகையில், தெளஃபீக் நல்ல மாணவர் என்றும், இம்மாணவரை தாம் மிகவும் விரும்புவதாகவும் தெரிவித்தார்.

1  2  3  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040