• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-03-01 18:12:28    
வங்காளதேச இளைஞர் தெளஃபீக்

cri

தெளஃபீக் சீனாவில் கல்வி பயின்று, சீனப் பண்பாட்டை ஆராய்வதில் சீன செய்தி ஊடகம் மிகவும் கவனம் செலுத்தியுள்ளது. பல தொலைக்காட்சி நிலையங்கள், வானொலி நிலையங்கள் மற்றும் செய்தி ஏடுகள் அவரைப் பேட்டி கண்டன. சீன மொழி படைப்பு எழுதுவதில் தெளஃபீக் சாதனை பெற்றுள்ளார். 2004ஆம் ஆண்டு, "சீனாவில் வாழும் அன்னியர்கள்" என்னும் நூல்களுக்கு கட்டுரையை எழுதுமாறு தெளஃபீகிற்கு சீன அன்னிய மொழி பதிப்பகம் அழைப்பு விடுத்தது. அவர், இந்த நூல்களுக்கு கட்டுரை எழுதும் முதலாவது எழுத்தாளராவார். இதற்கு பின், சீனப் பெண் ஒருவருடன் சேர்ந்து எழுதிய ஒரு நூல் வெளியிடப்பட்டது. சிங் ஹுவா பல்கலைக்கழகத்தில் தாம் கல்வி பயின்று, வாழும் அனுபவத்தையும், சீனாவின் பாரம்பரிய பண்பாடு, குறிப்பாக மண்பாண்டம் தயாரிப்பு மீதான ஆர்வத்தையும் இந்த நூல் விபரமாக விவரிக்கின்றது.

தெளஃபீக் செய்தியாளரிடம் பேசுகையில், சீனாவுக்கு வந்து, ஆழ்ந்த சீன பண்பாட்டைக் கல்வி பயின்று, புரிந்து கொள்வதால் தாம் மிகவும் அதிர்ஷ்டசாலி என்றும், பண்பாடுகள் பரவலாக நிறைந்து காணப்படும் இந்த நாட்டை தாம் மிகவும் விரும்புவதாகவும் தெரிவித்தார். சீன மக்களின் வாழ்க்கையில் பங்கெடுக்க தாம் பாடுபடுவதாகவும், இந்த வழிமுறை மூலம் சீனப் பண்பாட்டை நன்கு புரிந்து கொள்வதாகவும் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"சீனாவில், முதலில், சீன நண்பர்களுடன் பழகி கொள்ள வேண்டும். ஏனெனில், சீன மக்கள் அன்புள்ளம் கொண்டவர் என்றும், அன்னியர்களுடன் பழக அவர்கள் மிகவும் விரும்புகின்றனர் என்றும் நான் உணர்கின்றேன். இரண்டாவது, சீன தொலைக்காட்சியை பார்க்க வேண்டும். தொலைக்காட்சியில் பல அலைவரிசைகள் இருக்கின்றன. சீன பண்பாடு தொடர்பான உள்ளடக்கத்தை பார்க்கலாம். மூன்றாவது, நான் சுற்றுலா செய்யலாம். பெய்ஜிங்கிற்கு அப்பாலுள்ள பல பிரதேசங்களுக்கு சென்று, உள்ளூர் மக்களின் வாழ்க்கை, நடையுடை பாவனைகள் மற்றும் பண்பாடுகளை புரிந்து கொள்ளலாம். இதன் மூலம் சீனப் பண்பாட்டை நான் நன்கு அறிந்து கொள்ள முடியும்." என்றார் அவர்.

நீண்டகாலமாக சீனாவில் கல்வி பயின்று, வாழ்ந்து, சுற்றுலா செய்து, சீன நண்பர்களுடன் பழகி கொள்ள வேண்டும் என்று தாம் விரும்புவதாக தெளஃபீக் கூறினார். இதன் மூலம் தான், சீனா, சீன மக்கள் மற்றும் சீன பண்பாட்டை உண்மையாக புரிந்து கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்தார்.


1  2  3