
ரு செங் நகர்
தென் சீனாவின் குவாங் சி சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தில் தனித்தன்மை வாய்ந்த தேசிய இனமான மங் லெள இனம் வாழ்கின்றது. ஒரு லட்சத்து 50 ஆயிரம் மக்கள் உள்ள இவ்வினத்தில், 50க்கும் அதிகமான எழுத்தாளர்கள் தோன்றியுள்ளனர். சீன இலக்கிய அரங்கில் பெரும் செல்வாக்கு படைத்த அவர்கள், தேசிய இன நடையுடை பாவனையை வர்ணிப்பதில் தனிச்சிறப்பியல்புடைய மங் லெள இன எழுத்தாளர்கள் குழுவை உருவாக்கியுள்ளனர். சிறப்பு மிக்க சிறுபான்மை தேசிய இன எழுத்தாளர்கள் குழுவை அறிந்து கொள்வோம்.
தென் சீனாவின் குவாங் சி சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் ரு செங் நகரிலுள்ள மங் லெள இன தன்னாட்சி மாவட்டத்தில் மங் லெள இன மக்கள் முக்கியமாக வசிக்கின்றனர். அங்கு உயர்ந்த மலைகள் மலைகள் தொடராக உள்ளன. தெளிந்த ஆற்று நீர் மலைகளிடையே சலசலவென்று ஒடுகின்றது. ஆற்றின் இரு கரைகளிலும் வளமான வயல். மலைச்சரிவில் அடர்ந்த மூங்கில் மர காடு. மங் லெள இனத்தின் நாட்டுப்புறக்கதையில், இவ்விடம், Phoenix பறவைகளின் ஊராகும். மங் லெள இன மக்கள் தலைமுறை தலைமுறையாக இங்கு வாழ்ந்து வருகின்றனர்.
தற்போது, 50க்கும் அதிகமான மங் லெள இன எழுத்தாளர்கள் சீன இலக்கிய அரங்கில் அங்கீகரிக்கப்பட்டு, தனித்தன்மை வாய்ந்த ஒரு குழுவாக மாறியுள்ளனர். மங் லெள இன மக்களிடத்திலிருந்து இவ்வளவு அதிகமான எழுத்தாளர்கள் தோன்றியிருப்பதற்கு, இலக்கியத்தின் மீதான பற்று, வெளிநாட்டுப் பண்பாட்டை கிரகித்துக்கொள்வதில் தேர்ச்சி, கல்வியில் கவனம் ஆகியவை படைத்த தேசிய இன பாரம்பரியம், காரணமாகும்.
1 2 3
|