
மங் லெள இன மக்கள், நீண்டகாலமாக ஹன் இன மக்களுடன் இணைந்து வசித்திருப்பதால், ஹன் இனம் மற்றும் இதர பல சிறுபான்மை தேசிய இனங்களின் தலைசிறந்த பண்பாட்டுப் பாரம்பரியங்களைச் சேர்த்துள்ளனர். வெகு துவக்கத்திலேயே சீன தேசிய இனத்தின் பண்பாட்டில் கலந்துள்ளனர். ஆசிரியர்களுக்கு மதிப்பு, கல்வியில் கவனம் என்பது, இவ்வினத்தின் நடையாகும். மங் லெள இனத்தின் புகழ் பெற்ற உரைநடை நூல் எழுத்தாளரும சீன எழுத்தாளர் சங்க உறுப்பினருமான பாங் ஜிங் பேசுகையில், மங் லெள இன மக்கள் பண்பாட்டின் மீது மிகுதியும் மதிப்பு கொண்டுள்ளதாகக்கூறினார். அவர் கூறியதாவது:
"மங் லெள இன வட்டாரத்தில் முன்பு, "கல்வி விளை வயல்" என்ற அமைப்பு முறை நிலவியது. ஒவ்வொரு கிராமத்திலும் சுமார் பத்து மு அதாவது 2/3 ஹேக்டேர் பரப்புடைய கல்வி விளை வயல் இருந்தது. கிராமவாசிகள் மாறிமாறி இவ்வயலில் தானியம் பயிரிட்டு, பெற்றுள்ள தானியம், விதை தவிர்த்து, அனைத்தும் கிராமத்திடம் ஒப்படைத்தனர். இது, கிராம பள்ளிகளின் கல்வி கட்டணமாகப் பயன்பட்டது. தற்போதைய உதவத் தொகைக்கு இது சமம். எனவே, பண்பாட்டின் மீதுள்ள மதிப்பும், படிப்பின் மீதான எதிர்பார்ப்பும், ஒரு நடையாகியுள்ளன." என்றார்.

வெளிப்புற பண்பாட்டை கிரகித்துக்கொள்வதில் மங் லெள இன மக்கள் தேர்ச்சி பெற்றவர்கள். அன்றி, அவர்களின் பண்பாடும் தனிச்சிறப்புடையது. அதாவது, மங் லெள இன மக்கள் அனைவரும் நாட்டு்ப்புற பாடல் பாட மிகவும் விரும்புகின்றனர். இலக்கியத்தை வளர்ப்பதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகும். மங் லெள இனம் வாழும் கிராமம், குவாங் சி மாநிலத்தில் புகழ் பெற்ற நாட்டுப்புற பாடல் கிராமமாகும். அங்கு பாடல் பாடாதவர் ஒருவருமில்லை. எங்கு பாடுகின்றனர். எல்லா விஷயம் பற்றியம் பாடுகின்றனர். பாடுவது என்பது, மங் லெள இனத்தின் ஒரு வாழ்க்கை முறையாகும்.
இத்தகைய தேசிய இன பண்பாட்டின் செல்வாக்கினால், கிராமங்களில் கல்வி பயின்றவர்கள், தத்தமது குழந்தை பருவத்தில் கேட்டு ரசித்த நாட்டுப்புற பாடல்களை, பல்வகை கலை இலக்கியப் படைப்புகளாக இயற்றினர்கள். இதனால் மங் லெள இனத்தில் எழுத்தாளர்கள் பலர் உருவாகியுள்ளனர்.
1 2 3
|