
இந்த எழுத்தாளர்களிடையே நாட்டுப்புறப்பாடலினால் பாவ் இ தாங் மிகுதியும் பயனடைந்துள்ளார். 72 வயதான அவர், ஒரு சாதாரண விவசாயி குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயதிலிருந்தே இலக்கியத்தி்ன் மீது பிரியம் கொண்டார். நினைவுகூர்ந்து அவர் கூறியதாவது:
"நான், குழந்தை காலத்தில், தேசிய இன நாட்டுப்புறப் பண்பாட்டு சூழலில் வளர்ந்தேன். எனது பாட்டனாரும் பாட்டியாரும் கோடைக்காலத்தில் காற்று வாங்கும் இடத்திலும், குளிர்காலத்தில் வீட்டிலுள்ள நிலக்கரி அடுப்புப் பக்கத்திலும் அமர்ந்து, எங்கள் குழந்தைகளுக்குக் கதை சொன்னார்கள். அன்றி, இதர அதிகமான நாட்டுப்புற கதைகளும் உள்ளன. இவை தவிர, நாட்டுப்புறப்பாடல்களைப் பாடினோம். மங் லெள வட்டாரத்தில் நாட்டுப்புறப்பாடல்கள் அதிகம். விழா நாட்களில், விடுமுறை, திருமண விழா போன்றவற்றில், பேச்சுக்குப் பதிலாக மக்கள் பாடுவார்கள்." என்றார்.
பத்து வயதில் பாவ் இ தாங்கின் ஊரில் அடிக்கடி கொள்ளைக்காரர்கள் கொந்தரவு கொடுத்தனர். கொள்ளைக்காரர்களின் தீங்கை புரிய வைப்பதற்காக, நாட்டுப்புற பாடல் ஒன்றை அவர் இயற்றினார். ஊர்வாசிகள் அனைவரும் பாடிக் கொண்டே இருந்தனர். பின்னர், கொள்ளைக்காரர்களின் தலைவன் தோற்கடிக்கப்பட்டு இரவோடு கிராமத்துக்கு வந்த போது, அவரைக் கைது செய்வது பற்றிய பாடலை மக்கள் பாடிக்கொண்டனர். அச்சத்தினால், அவன் வீடு திரும்பத் துணியவில்லை. பின்னர் கிராமவாசிகளால் கைது செய்து அரசிடம் ஒப்படைத்தனர். நாட்டுப்புறப் பாடல், இவ்வளவு ஆற்றல் மிக்கது என்பதைக் கண்டு, இப்பாடலை இயற்றுவதி்ல் அவர் மேலும் பிரியம் கொண்டார்.

அவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அவரது செல்வாக்கில், சீன இலக்கிய அரங்கில் புகழ் பெற்ற எழுத்தாளர்களாக அவர்கள் மாறினர். ஒருவர் உரை நடை நூல் இயற்ற எழுதுபவர். மற்றொருவர், கவிஞர். ஒரு குடும்பத்தில் தகப்பனாலும், இரண்டு மகன்களும் இலக்கிய படைப்புகளில் ஈடுபடுவது, சீனாவின் சிறுபான்மை தேசிய இன இலக்கிய வரலாற்றில் முதன்முறையாகும்.
மங் லெள இன எழுத்தாளர்கள், மக்களின் கவனத்தை ஈர்க்கும் எழுத்தாளர்களாவர். அவர்கள், நீண்டகாலமாக படைப்புகளை இயற்றுவதில் ஈடுபட்டுள்ளனர். அன்றி, படைப்புத்துறையும் பரந்தது. கவிதை, புதினம், உரைநடை நூல், இசை நாடகம் போன்ற இலக்கிய வடிவங்களில் அவர்கள் ஈடுபடுகின்றனர். தவிரவும் சிறந்த் சாதனைகளைப் பெற்றிருக்கின்றனர். குவாங் சி சுவாங் இன தன்னாட்சிப் பிரதேசத்தின் இலக்கிய சம்மேளனத்தின் துணை தலைவர் தாங் ஜின் சு இந்த எழுத்தாளர்களை வர்ணித்ததாவது:
"பாவ் இ தாங் உள்ளிட்ட பிரபலமான எழுத்தாளர்கள் மங் லெள இனத்தில் தோன்றியுள்ளனர். சீன தேசிய இனப் பண்பாட்டுக்கு அவர்கள் முக்கிய பங்கை ஆற்றியுள்ளனர், தேசிய இனத் தன்மையும் யுகத்தன்மையையும் அவர்கள் தமது படைப்புகளில் நன்றாக பிரதிபலிக்கின்றனர்" என்றார். 1 2 3
|