• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-03-10 08:19:07    
சிறுபான்மைத் தேசிய இனக் கல்வித்துறையின் வளர்ச்சி 

cri

டாவுர் இன பெண்கள்

வட சீனாவின் உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த டாவுர் இன மங்கையர் ஒங் ஜிங் மேய்க்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. ஏனெனில், பெய்சிங் ஆசிரியர் பயிற்சிப் பல்கலைக்கழகத்து முனைவர் பட்டத்துக்கான மாணவர் பற்றிய அறிவிப்பு அட்டையை அவர் பெற்றார். இவ்வனத்தின் முதலாவது முனைவர் பட்ட மாணவியாக அவர் இருப்பார் என்பது, பெருமைக்குரியது? சீனாவில், அவளைப் போன்று, சிறுபான்மைத் தேசிய இனத்து முதுகலைப் பட்ட மாணவர், முனைவர் பட்ட மாணவர் பலர் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும், சிறு வயதிலிருந்தே சிறுபான்மை தேசிய இனக்கல்வி பயின்று வளர்ந்து, நாட்டின் சிறுபான்மைத் தேசிய இன வல்லுநர்களாகியுள்ளனர்.

சிறுபான்மைத் தேசிய இனக் கல்வியானது, சீனாவின் முழு கல்வி முறைமையின் ஒரு பகுதியாகும். பல்வேறு தேசிய இனங்கள், தத்தம் மொழிக்கிணங்க, சொந்த இன மொழி, சீன மொழி என்ற இரட்டை மொழியைக் கற்பிக்கின்றன. இது, சிறுபான்மைத் தேசிய இனக் கல்வியின் முக்கிய கல்வி வடிவமாகும். இம்முறையினால், சிறுபான்மைத் தேசிய இனத்தின் மொழி தோடர முடியும். பல்வேறு தேசிய இனப் பண்பாடு பாதுகாக்கப்பட முடியும். அன்றி, வெளிப்புறத்துடன் கருத்துப் பரிமாற்றம் மேற்கொள்ளும் ஆற்றலை சிறுபான்மைத் தேசிய இனங்கள் வலுப்படுத்தி இதன் விளைவாக, வளர்ச்சிக்கான மேலதிக வாய்ப்பினைப் பெற முடியும்.

சிறு வயதிலிருந்தே இரண்டு மொழிகளைக் கற்றுக்கொண்ட ஒங் ஜிங் மேய் அறிமுகப்படுத்தியதாவது:

"துவக்க நிலைப் பள்ளியில் சீன மொழியையும் டாவுர் மொழியையும் கற்றேன்; பின்னர், டாவுர் இன இடைநிலைப்பள்ளியில் கல்வி பயின்றேன். இதற்குப் பின், உள்மங்கோலிய தேசிய இன ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் படித்தேன். கல்லூரியிருந்து பட்டம் பெற்ற பின், மத்திய தேசிய இனப் பல்கலைக்கழகத்தின் கீழுள்ள கல்வித்துறைக் கல்லூரியில் முதுகலைப் பட்ட மாணவியானேன். தேசிய இனக் கல்வியியல் ஆய்வில் ஈடுபட்டேன். இப்போது, முனைவர் பட்ட மாணவியாக இருக்கின்றேன். எங்கள் இனத்தின் முதலாவது, முனைவர் பட்ட மாணவியாகின்றேன்." என்றார், அவர்.

1  2  3