
சிறுபான்மை தேசிய இன மாணவர்கள்
டாவுர் இனத்தவரின் எண்ணிக்கை, ஒரு லட்சத்து 40 ஆயிரமாகும். இது, சீனாவின் 55 சிறுபான்மைத் தேசிய இனங்களில் ஒன்றாகும். அவர்கள், முக்கியமாக சீனாவின் வட கிழக்குப் பகுதியில் குழுமி வாழ்கின்றனர். 1949ல் நவ சீனா நிறுவப்படுவதற்கு முன், இவ்வினம், நாடோடி வாழ்க்கை முறையை மேற்கொண்டது. சொந்த இனத்துக்குரிய கல்வி முறைமையில்லை. நவ சீனா நிறுவப்பட்ட பின், சீன அரசு, சிறுபான்மைத் தேசிய இனக் கல்வியை வளர்ச்சியுறச்செய்வதை, சிறுபான்மைத் தேசிய இனக் கொள்கையின் ஒரு முக்கிய பகுதியாகக் கொள்வதோடு, இதற்கு வளர்ச்சி உதவி என்ற கொள்கையையும் மேற்கொண்டுள்ளது.
சீன சிறுபான்மைத் தேசிய இனக் கல்வி ஆய்வகத்தின் தலைவர் செங் சின் கூறியதாவது:
"கடந்த 50 ஆண்டுக்கால வளர்ச்சி மூலம், பள்ளியில் கல்வி பயிலும் சீன சிறுபான்மைத் தேசிய இன மாணவரின் எண்ணிக்கை, பெருமளவில் அதிகரித்துள்ளது. அதன் மொத்த எண்ணிக்கை, ஒரு கோடியே 80 லட்சத்தைத் தாண்டியுள்ளது. பள்ளி மாணவரின் மொத்த எண்ணிக்கையில் இது, 7.6 விழுக்காடாகும். சிறுபான்மை தேசிய இனத்தவர் குழுமி வாழும் மாநிலங்களிலும் பிரதேசங்களிலும் பள்ளி செல்லும் வயது அடைந்த குழந்தைகளில் 98 விழுக்காட்டினர், பள்ளிக்குப் போகின்றனர்.

சிறுபான்மை தேசிய இன மாணவர்கள்
2000ம் ஆண்டு முதல், சிறுபான்மைத் தேசிய இனக் கல்வித்துறையின் வளர்ச்சிக்கென, சீன அரசு ஏற்கனவே 220 கோடி யுவானை ஒதுக்கியுள்ளது. இனிமேல், இத்தகைய முதலீட்டை சீன அரசு தொடர்ந்து அதிகரிக்கும். மேற்கு சீனாவில் சிறுபான்மைத் தேசிய இன மக்கள் ஒன்றுபட்டு வாழும் பிரதேசங்களில் தேசிய இன துவக்க நிலைப்பள்ளிகள் நிறுவப்படும். அத்துடன், ஒவ்வொரு பள்ளிக்கும் கணிணி, தொலைக்காட்சிப் பெட்டி முதலான நவீனமயமாக்க சாதனங்களும் படிப்படியாக அளிக்கப்படும்.
இரட்டை மொழியை நன்கு அறிந்த சிறுபான்மைத் தேசிய இன ஆசிரியர் அணியை உருவாக்குவது என்பது, சீன சிறுபான்மைத் தேசிய இனக்கல்வி வளர்ச்சியுற, முக்கிய காரணியாகும். எனவே, இத்தகைய ஆசிரியரைப் பயிற்றுவிப்பதில், சீன அரசு பெரிதும் கவனம் செலுத்தியுள்ளது.
1 2 3
|