• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-03-10 08:19:07    
சிறுபான்மைத் தேசிய இனக் கல்வித்துறையின் வளர்ச்சி 

cri

சிறுபான்மை தேசிய இன மாணவர்கள்

திபெத் இன மொழியையும் சீன மொழியையும் நன்கறிந்த ஜோரா எனும் திபெத் இனத்தவர், மத்திய தேசிய இனப் பல்கலைக்கழகத்தின் கீழுள்ள திபெத் இயல் ஆய்வகத்தின் ஆசிரியர் ஆவார். அவர், தமது பணி குறித்து கூறியதாவது:

"முக்கியமாக, திபெத் இன மத வரலாறு பற்றியும் சீன திபெத் இன மொழியாக்கம் பற்றியும் நான் பாடம் சொல்லிக்கொடுக்கின்றேன். எனது மாணவர்கள், திபெத் சிங் ஹாய், கான்சு, செச்சுவான் முதலிய மாநிலங்கள்-பிரதேசங்களிலிருந்து வந்தவர்கள். பாடம் முடிந்த பின், சிறுபான்மைத் தேசிய இனப் பண்பாட்டின் பரவல் பணியில் அவர்கள் முக்கியமாக ஈடுபடுவர்." என்றார், அவர்.

தனது மாணவர்கள், பெரும்பாலும், திபெத் இனப் பிரதேசத்து சாதாரண விவசாயி மற்றும் ஆயர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.

உள்ளூர் துவக்கப் பள்ளியில் படிப்பை முடித்துக்கொண்டு, கிழக்கு மற்றும் மத்திய சீனாவின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ள பிரதேசத்தில் இடைநிலைப் பள்ளியில் கல்வி பயில வேண்டும். இந்த இடைநிலைப்பள்ளிகள், கல்வி வளர்ச்சியில் திபெத் இனத்தவருக்கு உதவி அளிக்க, சீனாவின் பல்வேறு இடத்துக் கல்வி வாரியங்கள் அமைத்துள்ள திபெத் இடைநிலைப் பள்ளிகளாகும். அவர்கள் பட்டதாரியான பின் உயர் கல்வி நிலையங்களில் சேர வேண்டும்.

திபெத் இன மாணவர்கள்

வரலாறு, சமூகம் என்ற காரணங்களினால், சீனாவின் பெரும்பாலான சிறுபான்மைத் தேசிய இனங்களின் பண்பாட்டுத் தரம், ஹன் இனத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், தாழ்வாக உள்ளது. இதற்காக, சீன அரசு, முன்னுரிமை படைத்த கொள்கை பலவற்றை வகுத்துள்ளது. இதன் விளைவாக, மேன்மேலும் அதிகமான சிறுபான்மைத் தேசிய இன மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்களாயினர். சீன சிறுபான்மைத் தேசிய இனக் கல்வி ஆய்வகத்தின் தலைவர் பேராசிரியர் தெங் சிங் கூறியதாவது:

"1950ம் ஆண்டுகளுக்குப் பின், சிறுபான்மைத் தேசிய இன மாணவர்களுக்கென, சீன அரசு, தேசிய இனக் கல்லூரியை நிறுவியுள்ளது. சிறுபான்மைத் தேசிய இனக் கல்வி, சீனாவின் முழு உயர் கல்விமுறையில் ஒரு முக்கிய பகுதியாகியுள்ளது. தவிர, சாதாரண பல்கலைக்கழகத்தில், சிறுபான்மை தேசிய இன வகுப்பும் நடத்தப்படுகின்றது." என்றார், அவர்.

அனைத்து தேசிய இனங்களும் சமமாக வளர்ச்சி பெற வாய்ப்பை உருவாக்குவது தான், சீனாவின் தேசிய இனக் கல்விக் கொள்கையி்ன் அடிப்படைக்குறிக்கோள் ஆகும். அரசு கடைப்பிடித்துள்ள முன்னுரிமையுடைய நடவடிக்கை பலவற்றினால், சிறுபான்மைத் தேசிய இன மாணவர் பலர், கல்வி பயிலும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். இது, மிகப்பல சிறுபான்மைத் தேசிய இன உடன்பிறப்புகளின் வரவேற்பைப் பெற்றிருக்கின்றது. சிறுபான்மைத் தேசிய இனப் பிரதேசப் பொருளாதார சமூக வளர்ச்சியை பெரிதும் முன்னேற்றுவித்துள்ளது.


1  2  3