
"நகரில் வசிப்பதா அல்லது கிராமத்தில் வசிப்பதா என்பது, மனித வாழ்வில் ஒரு முக்கியமான தெரிவு. பல ஆண்டுகளின் பணிகளில், அடிக்கடி விவசாயிகளுடன் தொடர்பு கொண்டிருப்பதால், வேளாண் துறை மற்றும் விவசாயிகளின் மீது எனக்கு நெருக்கமான உணர்வு உண்டு. கிராமத்துக்கு திரும்பிய பின், விவசாயிகளுடன் தொடர்பு கொள்வது மேலும் எளிது என்று நாங்கள் கருதினோம்" என்றார் அவர்.
தற்போது, சென் சு ஹொ போன்று சுமார் 1500 ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள் சீனாவில் உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் பெரிய நகரங்களிலுள்ள ஊழியர் ஓய்வு இல்லத்தில் வசிக்கின்றனர். நல்ல மருத்துவ மற்றும் சிகிச்சை காப்பீட்டு சேவையையும் மற்ற வாழ்க்கை வசதிகளையும் அவர்கள் அனுபவிக்கலாம். சென் சு ஹொ இதற்கு விதிவிலக்கு.

ஊருக்கு திரும்பிய போது, முதுமை காலத்தை அமைதியாக கழிப்பது அவரின் எண்ணமாக இருந்தது. ஆனால், ஊருக்குத் திரும்பியதும், சுங் மெய் கிராமம் இன்னும் ஒரு பின்தங்கிய கிராமமாக இருப்பதைக் கண்டார். கிராமவாசிகள் நெல் பயிரிடுவதைச் சார்ந்து வாழ்ந்தனர். இந்த நிலைமையினால், அவரின் எண்ணம் மாறியது.
"வேளாண் துறைக்குப் பொறுப்பான துணை மாநில தலைவர் என்ற முறையில், வறுமை ஒழிப்பு பணி அலுவலகத்துக்கும் நான் பொறுப்பு ஏற்றிருந்தேன். ஏழைக் கிராமங்கள் வறுமையிலிருந்து வெளியேறாமல் இருப்பதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க வேண்டும். எனது ஊர் வறுமையிலிருந்து வெளியேறி வளமடைவதற்கான வழியைக் கண்டு, பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்" என்றார் அவர்.
தனி சாகுபடி முறை சுங் மெய் கிராமம் வறுமையில் இருப்பதற்கு முக்கிய காரணம் என்பதை சென் சு ஹொ கண்டார். உணவு தானியத்தின் விளைச்சல் அதிகமாக இருந்த போதிலும், உள்ளூர் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கவில்லை. இதற்கு எதிராக, அண்டை கிராமங்கள் வாழை மரங்களை நடுவதினால் வளமடைந்துள்ளன. முன்பு சுங் மெய் கிராமத்தில் சில ஹெக்டர் நிலத்தில் வாழை மரங்கள் நடப்பட்டன. ஆனால் நன்கு விளையவில்லை. இந்த கிராமம் உணவு தானியத்துக்கு முக்கியத்துவம் அளித்து, பணப் பயிர்களை அலட்சியம் செய்யும் பாரம்பரிய கருத்துதான், இதற்கு காரணம் என்று நான்பௌ வட்டத்தின் துணை தலைவர் கூறினார்.
1 2 3
|