
கிராமவாசிகளின் கருத்தை மாற்றுவதற்கு முன்னாள் துணை மாநில தலைவர் சென் சு ஹொ பல முயற்சிகளை மேற்கொண்டார்.
முதலில் அவர் கிராமவாசிகளை கூட்டி, வாழை சாகுபடி செய்யப்படும் இடத்திற்குச் சென்று பார்வையிட்டு கற்றுக் கொள்வதற்கு ஏற்பாடு செய்தார். கிராமவாசி லின் மௌ சிங் கூறியதாவது:
"முன்னாள் துணை மாநில தலைவரின் கவனம் மற்றும் ஏற்பாட்டில், Le Le, Dong Fang உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் நகரங்களில் உள்ள வாழை பயிரிடப்படும் இடத்திற்குச் சென்று பார்த்து கற்றுக் கொண்டோம். ஊர் திரும்பிய பின், சோதனை முறையில் வாழை மரத்தை வளர்க்க, கிராம கமிட்டி, கிராமவாசிகளை அணி திரட்டியது" என்றார் அவர்.

பின்னர், சென் சு ஹொ வீடுவீடாக சென்று கிராமவாசிகளை அணி திரட்டினார். இறுதியில் மிகவும் சுறுசுறுப்பான 7 குடும்பங்கள் அவரின் ஏற்பாட்டில் வாழை கூட்டுறவு அமைப்பை நிறுவின. அதன் சிரமதான ஆலோசகராக அவர் வேலை செய்தார். பண பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, அவர் கிராமப்புற நம்பிக்கை பொறுப்பு நிறுவனத்துக்கு சென்று கடன் கோரினார். தொழில் நுட்பங்கள் கிராமவாசிகளுக்கு புரியவில்லை. ஹாய்நான் மாநிலத்தின் வேளாண் அறிவியல் கழகத்தின் நிபுணரை சென் சு ஹொ அழைத்தார். நல்ல அறுவடை பெற்ற பின், அவர் கடைகளுடன் தொடர்பு கொண்டு, முதல் தொகுதி வாழைப் பழங்கள் விற்கப்பட்டன.
ஒரு ஆண்டுக்கு பின்னர், இந்த 7 குடும்பங்களுக்கு சுமார் 4 லட்சம் யுவான் வருமானம் கிடைத்தன. 60 ஆயிரம் யுவான் கடனை அவர்கள் திருப்பி செலுத்தியது மட்டுமல்ல, அந்த நம்பிக்கை பொறுப்பு நிறுவனத்தில் 3 லட்சம் யுவானுக்கு மேலான தொகையை சேமித்து வைத்தனர். கிராம கமிட்டியின் வாயிலில் மாவட்டம் முழுவதிலும் முதலாவது நம்பிக்கை பொறுப்பு கிராமம் என்ற பலகையை இந்த நிறுவனத்தின் தலைவர் சென் பெங் சாங் மகிழ்ச்சியுடன் மாட்டி வைத்தார்.
"இந்த கிராமத்தில் கடன் வழங்கப்பட்ட ஒவ்வொரு குடும்பம் நம்பிக்கை பொறுப்பு ஏற்றதினால், நம்பிக்கை பொறுப்பு நிறுவனம் இந்த கிராமத்துக்கு ஆதரவளிக்கிறது. கிராமவாசிகளுக்கு கடன் வழங்குவதில் கவலை இல்லை" என்றார் அவர்.
சுங் மெய் கிராமம் படிப்படியாக வளமடைந்துள்ளது. சென் சு ஹொ தலைமையில், கிராமவாசிகள் உற்பத்தி மற்றும் வாழ்க்கை வசதிகளை மேம்படுத்தி, உயிரி பண்பாட்டு கிராம கட்டுமானத்தில் ஈடுபடுகின்றனர். வேளாண் வர்த்தக சந்தை, மருத்துவ விடுதி, பொழுது போக்கு மையம் முதலியவை நிறுவப்பட்டுள்ளன. சென் சு ஹொ கிராமத்துக்கு திரும்பி விவசாயியாக மாறியதினால், சுங் மெய் கிராமத்தின் விவசாயிகள் நகர வாழ்க்கையை நடத்துகின்றனர் என்று கிராமவாசிகள் அனைவரும் கூறுகின்றனர். 1 2 3
|