• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-03-15 15:01:43    
கிராமங்களுக்குச் சென்ற பல்கலைக்கழக மாணவர்கள்

cri

முன்பு, சீனாவில், பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்த மாணவர்களுக்கும், சிற்றூர் ஆட்சி தலைவரின் உதவியாளருக்கும் தொடர்பு இல்லாத ஒரு நிலை நிலவியது. ஏனெனில், கிராமங்களுக்குச் சென்றால், தமக்கு வளர்ச்சி வாய்ப்பு கிடைக்காது என்று பல்கலைக்கழக மாணவர்கள் பலரும் கருதினர். தற்போது, இந்த கருத்து மாறிவிட்டது. பல மாணவர்கள் கிராமங்களுக்குச் சென்று, தங்களது திறமையை வெளிப்படுத்த துவங்கியுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக பெய்ஜிங் மாநிலத்தின் பிங் கு பகுதியின் Gua Jia Yu கிராமத்தில், பழக்கவழக்க சுற்றுப் பயணம் என்ற திட்டம் நடைமுறையில் உள்ளது. அந்த ஊருக்கே வரித்தான சிறப்புடைய மர வீடுகள் இந்த கிராமத்தில் ஒழுங்கான முறையில் கட்டப்பட்டுள்ளன. வீடுகளுக்கு வெளியே, சூரிய வெப்ப மின்சாரம் அல்லது காற்று வள மின்சார சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. கிராமம் முதுவதும், பழமையின் பிடியில் இருந்து விடுபட்டு, நவீன மயமாக்கம் தெரிகிறது.

ஊராட்சி தலைவரின் உதவியாளர் ஹு தியன் வெய், நல்ல கட்டான உடல் கொண்ட இளைஞர். கடந்த ஆண்டில் பெய்ஜிங் பூங்கா மற்றும் காட்டு நிர்வாக கழகத்தில் பட்டம் பெற்று, இந்த கிராமத்துக்கு வந்து, உதவியாளராக பணி புரிகிறார். இந்த கிராமம், வேலை பார்க்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பை வழங்குகிறது, குறிப்பாக, இந்த கிராமத்தில் வேலை செய்து சாதனைப் பெறலாம் என்பதால் இதை தெரிவு செய்ததாகக் கூறினார்.

ஹு தியன் வென் போன்று கிராமங்களுக்குச் சென்று வேலை செய்வதென முடிவு செய்த, படிப்பை முடித்த பல்கலைக்கழக மாணவர்களின் எண்ணிக்கை, கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. சீனாவில் பெரும்பாலான மாவட்டங்களில், உயர் கல்வித் தகுதி பட்டம் பெற்ற கீழ் மட்ட ஊழியர்கள் பலர் உள்ளனர். எடுத்துக்காட்டாக, ஹே நான் மாநிலத்தின் பிங் திங் சான் நகரில், 3000த்துக்கும் அதிகமான பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற ஊழியர்கள் உள்ளனர். அவர்கள் சிறு நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் சென்று, விவசாயிகளுக்கு உதவி வழங்கி, நண்பர்களாகின்றனர்.

1  2  3