• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-03-15 15:01:43    
கிராமங்களுக்குச் சென்ற பல்கலைக்கழக மாணவர்கள்

cri

Bo Li Tai கிராமத்தில், பல்கலைக்கழகப்பட்டதாரி Song Xiao Na கிராமத்தலைவரின் உதவியாளராவார். கிராம விவசாயிகளுக்கு கணிணி பாடம் அவர் கற்பிக்கின்றார். அவர் கூறியதாவது:

"கிராம அதிகாரியாக பதவி ஏற்ற பின், என் சிந்தனை பக்குவமடைந்துள்ளது. என் திறன் பெரிதும் உயர்ந்துள்ளது." என்றார் அவர்.

Hu Tian Wei மற்றும் Song Xiao Na போன்ற பலர், கிராமங்களில் போராடி, தங்களது வாழ்க்கை லட்சியத்தை நாடுகின்றனர். 80 விழுக்காட்டுக்கு அதிகமான பல்கலைக்கழகப் பட்டதாரிகள், கிராமத்துக்கு சென்று அதிகாரியாக பதவி ஏற்பது குறித்து மனநிறைவு அடைகின்றனர். அண்மையில், சீன விவசாயப் பல்கலைக்கழகம் நடத்திய கருத்துக் கணிப்பு இதைக் காட்டுகின்றது.

பல்கலைக்கழகப் பட்டதாரிகள் கிராமங்களுக்கு செல்வதால், விவசாயிகளுக்கு அதிக பயனடைந்துள்ளனர். Henan மாநிலத்தின் ஒரு கிராமத்தில், அறிவியல் முறையில் வயலில் உரம் போடுவது பற்றி விவசாயிகளுக்கு பல்கலைக்கழகப்பட்டதாரி ஒருவர் சொல்லிக்கொடுக்கின்றார். விவசாயிகள் பயிரிடும் காய்கறிகளின் வருமானம், ஒவ்வொரு ஹெக்டருக்கும் சுமார் 15 ஆயிரம் யுவான் அதிகம். Bo Li Tai கிராமத்தில், விவசாயிகள் "விவசாய குடும்பத்தில் சுற்றுலா" நடத்துவதற்கு Song Xiao Na உதவி அளிக்கின்றார். தமது வீடுகள், கோழிகள், வாத்துகள், தாம் பயிரிடும் காய்கறிகள், பழ வகைகள் உள்ளிட்ட வளங்கள் மூலம், விவசாயிகளின் வருமானம் அதிகரித்துள்ளது.

விவசாயி Fan De Fu செய்தியாளரிடம் கூறியதாவது:

"Xiao Naயின் பெரும் ஆதரவுடன், கடந்த ஆண்டின் செப்டம்பர் திங்களில் என் வீட்டில் உணவு விடுதி திறந்தேன். பிரிட்டிஷ், தென் கொரிய, தைவான் பயணிகளை வரவேற்கின்றேன். பெய்ஜிங் மாநகரவாசிகள் மிக அதிகம் வருகின்றனர். இதன் மூலம் பெறும் வருமானம், தானிய சாகுபடி மற்றும் மரம் வளர்ப்பு மூலம் பெற்ற வருமானத்தை விட அதிகம். விவசாயிகளின் மனதில், அவர் தலைசிறந்த தலைவராவார்." என்றார் அவர்.

தற்போது, பல்கலைக்கழக மாணவர்கள் கூடுதலாக கிராமங்களுக்கு சென்று பணி புரிவதை தூண்டும் வகையில், சீனாவின் பல இடங்களில் முன்னுரிமைச்சலுகைகள் வழங்கப்படுகின்றன. கிராமங்களில், வேலை வாய்ப்பை வழங்கும் பணிகள் மேம்பட்டு வருவதுடன், மாணவர்கள் கிராமங்களுக்கு பணி புரியும் எதிர்காலம் ஒளிமயமானது என்று நம்புகின்றோம்.


1  2  3