
பல்கலைக்கழக மாணவர்கள் கிராமங்களில் பணி புரிவது பற்றி, சீன சமூக அறிவியல் கழகத்தின் மக்கள் தொகை ஆய்வகத்தின் பேராசிரியர் Wang De Wen கூறியதாவது—
"கிராம பொருளாதாரத்தின் வளர்ச்சியோடு, அங்கு அடிப்படை வசதிகளின் கட்டுமானத்துக்கு திறமைசாலிகள் தேவை. இந்த நிலைமையில், பல்கலைக்கழக மாணவர்கள் கிராமங்களுக்குச் சென்று வேலை பார்க்கும் போது மேலும் அதிக வாய்ப்புகளைப் பெறலாம். சீனாவில் உயர் நிலைக் கல்வியின் வளர்ச்சியால், மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதனிடையே, கிராமப்புறப் பொருளாதார வளர்ச்சியின் காரணமாக, பல்கலைக்கழக மாணவர்களுக்கான தேவை ஏற்பட்டு விட்டது. இதனால், சில மாணவர்கள் கிராமங்களில் பணியாற்றும் நிலைமை தோன்றிவிட்டது" என்றார் அவர்.

கிராமங்களுக்கு வந்த பல்கலைக்கழகப்பட்டதாரிகளின் பணியும், வாழ்க்கையும் எப்படி? Gua Jia Yu கிராமப்புறத்தின் பட்டதாரி Hu Tian Wei பேசுகையில், பல்கலைக்கழகத்தில், சுற்றுலா நிர்வாகச் சிறப்புத் துறையில் தாம் கல்வி பயின்றதாகவும், இங்கு தமது மேம்பாடு வெளிக்கொணரப்படுகின்றது என்றும் தெரிவித்தார். இங்கு வந்த பின், கணிணியைப் பயன்படுத்துவது, சுற்றுலா தகவல்களை கண்டறிவது, மின்னஞ்சலை அனுப்புவது ஆகியவை பற்றி, விவசாயிகளுக்கு அவர் பாடம் கற்பித்தார். இக்கிராமத்தின் செல்வாக்கை அதிகரிக்கும் பொருட்டு, கிராமச் சுற்றுலா இணைய தளத்தை அவர் உருவாக்கினார்.
Hu Tian Weiயின் ஈடுபாடுகளை தலைவர் மற்றும் சக பணியாளர்கள் பாராட்டினர். இக்கிராமத்தின் தலைவர் Zhang Chao Qi கூறியதாவது:
"அவர், நேர்மையானவர். சுற்றுலா வளர்ச்சி திட்டப்பணியில், தம் தத்துவத்தையும், இங்குள்ள சுற்றுலா நிலைமையையும் இணைப்பதன் மூலம், பல அனுபவங்களை அவர் வகுத்து, குறைபாடுகளை சுட்டிக்காட்டினார். இத்தகைய பல்கலைக்கழக பட்டதாரிகள் கிராமத்துக்கு தேவை. விவசாயிகள் அவர்களை மிகவும் வரவேற்கின்றனர்." என்றார் அவர்.
1 2 3
|