• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-03-16 17:36:42    
கிராமத்திலான மக்கள் ஜனநாயக ஆட்சி முறை

cri

கலை........சீனாவின் 130 கோடி மக்கள் தொகையில் 80 கோடி மக்கள் கிராமங்களில் வாழ்கின்றனர். விவசாயிகள் எப்படி தங்களது சொந்த ஜனநாயக உரிமையை செயல்படுத்துவது சீனாவின் ஜனநாயக கட்டுமானத்தில் மிக பெரிய விஷயமாகும். கடந்த 80ம் ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவின் கிராமத்தில் ஊழியர்கள் பொதுவாக மேல் தலைமை பீடத்தால் நியமிக்கப்பட்டனர். அதற்கு பின் கிராமங்களில் நேரடியாக தேர்தல் மூலம் கிராமத் தலைவர்கள் விவசாயிகளிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதாவது கிராமவாசிகள் சுய விருப்பத்தின் படி அவர்களுக்கு பிடிக்கும் மனிதரை அவர்களின் தலைவராக தேர்ந்தெடுத்தனர். இதன் விளைவாக மக்களை மையமாக் கொண்ட தன்னாட்சி அமைப்பான கிராம கமிட்டி உருவாயிற்று.

ராஜா.....இந்த சீர்திருத்தம் சீனாவின் கிராமங்களில் கீழ் மட்ட ஜனநாயக கட்டுமானத்தை துவக்கியது. கடந்த பத்தாண்டுகளுக்கு அதிகமான நடைமுறைகளின் மூலம் சீனாவில் 1998ம் ஆண்டில் "கிராம கமிட்டி அமைப்பு சட்டம்"வெளியிடப்பட்டுள்ளது. கிராம கமிட்டி சுய நிர்வாகம், சுய கல்வி, சுய சேவை ஆகியவற்றை கிராம வாசிகள் நிறைவேற்றும் கீழ் மட்ட தன்னாட்சி அமைப்பாக சட்டத்தின் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஊழியர்களின் பதவி காலம் 3 ஆண்டுகளாகும். கிராம வாசிகள் நேரடியாக கிராம கமிட்டி உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க முடியும். அவர்களை நிராகரிக்கவும் முடியும் என்று சட்டத்தின் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

1  2  3