கலை......நீங்கள் சொன்னது இப்போதைய சீன கிராமங்களின் நிலைமைக்கு பொருந்தியது. இவ்வாண்டின் துவக்க முதல் சீன மத்திய அரசு புதிய கிராமத்தை உருவாக்கும் கொள்கையை முன்வைத்துள்ளது.
ராஜா.....எனக்கு புரிகிறது. இதில் கிராம ஜனநாயக தன்னாட்சி அமைப்பு முறை முழுமையாக்குவது, கிராம விவகாரங்களை வெளியிடுவதையும் ஜனநாயக முறையில் விவகாரங்கள் பற்றி விவாதிக்கும் அமைப்பு முறையும் மேம்படுத்துவது, விவசாயிகள் தகவல் அறிந்து கொள்ளும் உரிமை, விவகாரங்களில் ஈடுபடும் உரிமை, நிர்வாக உரிமை, கண்காணிக்கும் உரிமை ஆகியவற்றை செயல்படுத்துவது முதலியவை மத்திய அரசு முன்வைத்த கொள்கையில் அடங்கும்.
கலை.......இந்த கொள்கையை சீன தலைமை அமைச்சர் நடப்பு தேசிய மக்கள் பேரவை கூட்டத் தொடரில் சிறப்பாக எடுத்துக் காட்டியுள்ளது.
ராஜா.....ஆகவே சீனாவின் புதிய கிராம உருவாக்கம் முன்னேற்றமடைவதுடன் கிராமத்தில் ஜனநாயகம் மேலும் நடைமுறைபடுத்தப்படும். மிக பல சீன விவசாயிகளுக்கு மேலும் அருமையான ஜனநாயக எதிர்காலம் கொண்டு வரப்படும் என்பதில் ஐயமில்லை என்று நம்புகின்றேன்.
கலை.....நேயர்கள் இதுவரை கிராமங்களில் கீழ் மட்டத்தின் ஜனநாயக நிர்வானம் பற்றி ராஜாராம், தி கலையரசி நடத்திய உரையாடலை கேட்டீர்கள். இத்துடன் கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நிறைவடைகின்றது.
1 2 3
|