• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-03-16 17:36:42    
கிராமத்திலான மக்கள் ஜனநாயக ஆட்சி முறை

cri

கலை.....கிராமவாசிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம கமிட்டி உறுப்பினர்கள் இயல்பாகவே கிராம வாசிகளுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும். அத்துடன் அவர்களின் கண்காணிப்பின் கீழ் பணிபுரிய வேண்டும். சீனாவில் கிராம கமிட்டி துவக்கிய "கிராம கமிட்டி விவகார அறிவிப்பு"என்னும் சுவர் அறிக்கை நிறுவி 9 ஆண்டுகளாகிவிட்டது. கிராம வாசிகள் அக்கறை கொண்ட கிராம விவகாரம், நிதி கணக்கு விவகாரம் ஆகியவை இந்த சுவர் அறிக்கையில் வெளியிடப்பட்ட பின் பிரச்சினை கண்டதும் கிராம வாசிகள் சந்தேகத்தை எழுப்பலாம். அவர்களின் சந்தேகத்திற்கு பகுதி பகுதியாக பதிலளிக்கலாம்.

ராஜா.....சுவர் அறிக்கை நிறுவுவது போதாது. ஏனென்றால் சில சமயங்களில் வெளியிடப்பட்ட கணக்கு போன்ற தகவல்களை கிராமவாசிகள் நம்ப மாட்டார்கள் என்ற சூழல் வந்தால் என்ன செய்வது?

கலை.....கவலைப்படாதீர்கள். நிதி கண்காணிப்பு குழு கிராமத்தில் நிறுவப்பட்டுள்ளது. இந்த பணி குழுவின் கண்காணிப்பில் கிராம கமிட்டியின் வேலை மேலும் தெளிவுபடுத்தப்படுகின்றது. ஆகவே கடந்த சில ஆண்டுகளில் கிராம வாசிகளின் தன்னாட்சி முறை மூலம் சீனாவின் கிராமங்களில் ஜனநாயகம் உருவாக்கப்பட்டுள்ளது. தங்களுக்குத் தாங்களே எஜமானர் என்ற ஊற்சாகம் விவசாயிகளிடையில் ஊக்கபடுத்தப்பட்டுள்ளது.

ராஜா......கிராமங்களில் ஜனநாயகம் நடைமுறைபடுத்தும் போக்கில் பிரச்சினை நிகழ்ந்தால் என்ன செய்ய முடியும். இது பற்றி எப்படி கையாள முடியும்?

கலை......இது பற்றி சிங்குவா பல்கலைக்கழகத்தின் பொது நிர்வாக கழகத்தின் பேராசிரியர் ரன் சியென் மின் கூறியதாவது

ராஜா........கிராம நிலையில் ஜனநாயகத்தை நிறைவேற்றும் போது கிராமங்களின் நிலைமைக்கு ஏற்ப நடைமுறைபடுத்த வேண்டும். ஒட்டு மொத்தமாக நடைமுறைபடுத்த கூடாது. கிராம மட்ட ஜனநாயகம் சட்டத்தினால் பாதுகாக்கப்படுகின்றது. ஆனால் உருப்படியான அமைப்பு முறை இன்னும் முழுமையாக்கப்படாத நிலையில் கிராமத்தின் நிலைமைக்கு ஏற்ப அறிவியல் கண்ணோட்டத்துடன் கூடிய அமைப்பு முறை நிறுவப்பட வேண்டும். இந்த அடிப்படையில் ஜனநாயகம் நிறைவேறுவதற்கு உத்தரவாதமளிக்கலாம்.

1  2  3