
சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி பிரச்சாரம் செய்யும் வகையில், ஒரு பிரிட்டிஷ் நாட்டவர், 40 ஆயிரம் கிலோமீட்டருக்கு அதிகமான தூரம் நடந்து சென்று, 30க்கு அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களில் மொத்தம் சுமார் 10 லட்சம் மரங்களை நட்டுள்ளார். அண்மையில் அவர் சீனா வந்தடைந்தார். தமது செயலின் மூலம் சீனர்களுடன் சேர்ந்து பசுமை ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்காக பங்காற்ற அவர் விரும்புகிறார். இன்றைய நிகழ்ச்சியில், Paul Colman என்ற இந்த பிரிட்டிஷ் நாட்டவர் பற்றி தெரிந்து கொள்வோம்.
பிப்ரவரி 10ஆம் நாள் காலையில், பெய்ஜிங் Dong Cheng பகுதியில் அமைந்துள்ள ஒலிம்பிக் குடியிருப்பு பகுதியின் பொழுது போக்கு மையத்தில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொண்டர்கள் பலர், பூமியைப் பராமரிப்பது பற்றிய ஒரு பாடலை பாடிக் கொண்டிருந்தார்கள். இந்த தொண்டர்களில், அவ்வளவு உயரமாக இல்லாத, நரைத்த தலைமயிர் உள்ள Paul Colman மிகவும் மக்களின் கவனத்தை ஈர்த்தார்.
51 வயதான அவர், துடிப்பானவர். இளைஞராக இருந்த போது, ஒரு கப்பலில் சமையல்காரராக பணிபுரிந்த அவர், ஒவ்வொரு நாளும் குப்பைகளையும் கழிவுகளையும் கடலில் எறிந்தார். அப்போது, இது சரியா என்று அவர் நினைத்தார். பின்னர், பணக்காரி ஒருவருக்கு ஓட்டுநராக வேலை செய்த அவர், பல இடங்களில் சுற்றுலா செய்தார். சில இடங்களில் கடுமையான மாசு பிரச்சினை நிலவியதை அவர் கண்டறிந்தார். இதனால், அவர் வேலையிலிருந்து விலகி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய பிரச்சாரம் செய்து, பூமியைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். 1992ஆம் ஆண்டில், நடைப் பயணம் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணியை துவங்கினார். நடந்தே சென்று பிரச்சாரம் செய்வதால், மேலும் அதிகமான மக்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்று அவர் கருதுகிறார். அவரின் நடைப் பயணம் இன்று வரை தொடர்கிறது.
1 2 3
|