
பசுமை ஒலிம்பிக் பற்றி பிரச்சாரம் செய்யும் Paul Colmanனின் செயலுக்கு சீன அரசு மற்றும் சமூகத்தின் ஆதரவு கிடைத்தது. அவரைச் சந்தித்துப் பேசிய சீன வனத் தொழில் பியூரோவின் அதிகாரி ஒருவர் அவரின் செயலைப் பாராட்டினார். Paul Colmanனுடன் சேர்ந்து செயல்படுமாறு, பெய்ஜிங் பூகோள கிராமம் என்ற ஒரு அரசு சாரா சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் பணியாளர்கள் பல தொண்டர்களை அணி திரட்டியுள்ளனர். இவ்வமைப்பின் பணியாளர் Chi Tian Wu செய்தியாளரிடம் கூறியதாவது—
"முதலில் பூகோள கிராமத்தின் 700 தொண்டர்களிடம் அவர்களின் மூலம் பிரச்சாரம் செய்வதை பற்றி தெரிவித்தோம். இதற்குப் பின், ஒரு இணைய தளத்தை நாங்கள் நிறுவி, Paulவுடன் சேர்ந்து நடந்து செல்ல விரும்புபவர்களுடன் தொடர்பு கொள்கின்றோம்" என்றார் அவர்.

Paulவின் செயலுக்கு பெய்ஜிங் மாநகரவாசிகளின் வரவேற்பு கிடைத்தது. வாழ் நாட்களில் உலகம் முழுவதும் நடந்தே சென்று, 10 கோடி மரங்களை நடுவதாக தெரிவித்த Paulவை அவர்கள் அனைவரும் வியந்து பாராட்டுகின்றனர்.
பெய்ஜிங் மாநகரைச் சேர்ந்த Yu Xin Bin அம்மையார் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி பிரச்சாரம் செய்து வருகிறார். Paulவின் செயல், தன்னை ஆழமாக மனம் உருகச் செய்துள்ளது என்று கூறினார்.
"அவரின் செயல் மகத்தானது, புனிதமாகவும் உள்ளது. ஆனால், கடினமாக உள்ளது. இந்த நிகழ்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய பிரச்சார பணி நான் தொடர்ந்து செய்வேன்" என்றார் அவர்.
பிப்ரவரி 11ஆம் நாள், Paul தேவலோக ஆலயத்தின் தெற்கு வாயிலிலிருந்து புறப்பட்டு, நடைப் பயணம் தொடங்குகிறார். பின்னர், தென் கொரியாவின் சியோல் நகரிலிருந்து புறப்பட்டு ஜப்பானின் டோக்கியோ மாநகருக்குச் சென்று, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அமைதிக்காக மேலும் பெரும் பங்காற்றுமாறு இவ்விரு நகரங்களைச் சேர்ந்தவர்களுக்கு வேண்டுகோள் விடுப்பார். 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி நடைபெறும் போது மீண்டும் சீனாவுக்கு வந்து, ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் மூலம், பசுமை ஒலிம்பிக் கருத்தை உலகின் பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல இருப்பதாக அவர் கூறினார். 1 2 3
|