
2006 பெய்ஜிங்-சியோல்-டோக்கியோ நடைப் பயணத்துக்காக அவர் முதலில் சீனாவுக்கு வந்தார். இவ்வாண்டு ஏப்ரல் 22ஆம் நாள், அதாவது உலக புவி தினம் வரும் முன், ஆசியாவின் இந்த 3 மாநகரங்களுக்கு அவர் நடந்தே சென்று, சுற்றுச்சூழலைப் பராமரித்து, பூமியைப் பாதுகாக்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுப்பார். பெய்ஜிங் பயணம், சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று Paul கூறினார். பசுமை ஒலிம்பிக் திட்டப்பணி பெய்ஜிங்கில் நடைபெறுகிறது. பெய்ஜிங் மாநகரைச் சேர்ந்த அனைவருடனும் இணைந்து இந்த திட்டப்பணிக்கு ஊக்கம் தர விரும்புவதாக அவர் கூறினார்.
"ஏப்ரல் 22ஆம் நாள் உலக புவி தினத்துக்காகவும், குறிப்பாக பெய்ஜிங் பசுமை ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் கட்டுமானத்தைத் தூண்டுவதற்காகவும், முதலில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரச்சாரம் செய்ய வேண்டும். இந்த பணியில் பங்கெடுப்பதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்" என்றார் அவர்.

ஜனவரி 15ஆம் நாள் பெய்ஜிங் வந்ததில் இருந்து, அவர் நடைப் பயணம் மேற்கொண்டு வருகிறார். பசுமைமயமாக்கத்துக்கு முக்கியத்துவம் தந்து, ஒலிம்பிக் திட்டப்பணிகளில் எரியாற்றலை சிக்கனப்படுத்தும் பசுமை கட்டிட பொருட்களைப் பயன்படுத்தும் நடவடிக்கை, அவரின் மனதில் ஆழ பதிந்திருக்கிறது. மற்ற நாடுகள் போல் சீனாவில் மாசுப் பிரச்சினை நிலவிய போதிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய சீனாவின் மனப்பான்மை ஆக்கப்பூர்வமாக உள்ளது என்பதை அவர் கண்டுள்ளார். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முன்னோடி நாடாக சீனா மாறிவிடும் என்றும், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி, வெற்றிகரமாக பசுமை ஒலிம்பிக் விளையாட்டு போட்டியாக நடத்தப்படும் என்றும் அவர் நம்புகிறார். நடந்து செல்லும் போது, சீனர்கள் பலரை அவர் சந்தித்துப் பேசுகிறார். சீன மக்களின் உற்சாகமும் நட்பும் தமக்கு மனம் உருகச் செய்கிறது என்றார். அவர் கூறியதாவது—
"ஒவ்வொரு நாளும் வேடிக்கையான நிகழ்ச்சிகள் நிகழ்கின்றன. ஒவ்வொரு நாளும் நான் சந்திக்கும் மக்கள் வேடிக்கையானவர்கள். அவர்கள் உற்சாகத்துடன் நட்பாகப் பழகுகின்றனர். வசந்த விழாவுக்கு முந்தைய நாளிரவு நான் வீதியில் நடந்து சென்ற போது, இருப்பிடத்தை கண்டறிய முடியவில்லை. வழி தெரியாமல் திகைத்த போது, காரை ஓட்டி வந்த ஒரு இளம் பெண் எனக்கு அருகில் வந்து, தமது வீட்டுக்கு வசந்த விழாவை கொண்டாட வருமாறு என்னை அழைத்தார்" என்றார் Paul.
1 2 3
|