
மார்சு திங்கள், குளிர் நீங்காத பெய்சிங் மாநகரம், உலகின் கவனத்தை ஈர்த்தது. பத்தாவது சீன தேசிய மக்கள் பேரவையின் ஆண்டுக்கூட்டம் பெய்சிங்கில் நடைபெற்றது. நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து வந்த 2600 பிரதிநிதிகள் ஒன்றுகூடி, சீனாவின் எதிர்கால வளர்ச்சிக்கு ஆலோசனைகள் கூறினர். அவர்களில் பலர், சிறுபான்மை தேசிய இன இளைஞர்களின் பிரதிநிதிகள். வண்ண வண்ண தேசிய இன ஆடைகள், அணிந்து, பெரும் லட்சியத்துடன் வந்த அவர்களின் முகம் மலர்கின்றது. தங்கள் மீது தேசிய இன உடன்பிறப்புகள் கொண்டுள்ள நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பினால், நாட்டின் உரிமையாளராகி, அரசின் விவகாரங்கள் பற்றி யோசனை கூறும் மனவுறுதி மேலும் திடமாகியுள்ளது. இன்றைய நிகழ்ச்சியில், இத்தகைய சிறுபான்மை தேசிய இன இளம் பிரதிநிதிகளில் சிலர் பற்றி அறிமுகப்படுத்துகின்றோம்.

சீனாவில் மொத்தம் 56 தேசிய இனங்கள் இருக்கின்றன. அவற்றில் 55, சிறுபான்மை தேசிய இனங்களாகும். அவற்றின் மொத்த மக்கள் தொகை பத்து கோடிக்கும் அதிகம். நாட்டின் மக்கள் தொகையில் இது 9 விழுக்காடு. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட 2600க்கும் அதிகமான பிரதிநிதிகளில் சிறுபான்மை தேசிய இனப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் 300க்கும் மேலானவர்களாவர்.
27 வயதான பாங் வாங் இங் என்னும் இளம் பெண் யுன்னான் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு ஈ இன பிரதிநிதி. சீனாவின் சிறுபான்மை தேசிய இனங்களில் ஒன்றான ஈ இன மக்கள், முக்கியமாக, தென் மேற்கு சீனாவின் யுன்னான் மாநிலத்தில் வசிக்கின்றனர். சிங் சுவாங் உள்ளிட்ட இதர மாநிலங்களிலும் அவர்கள் வசிக்கின்றனர். மக்கள் பேரவை பிரதிநிதிகளிலேயே அவர் மிகவும் இளமையானவர். அது மட்டுமல்ல, ஊனமற்றோரின் பிரதிநிதியாகவும் இருக்கிறார். 2002ம் ஆண்டில் நடைபெற்ற உலக ஊனமுற்றோர் விளையாட்டுப் போட்டியில் 200 மீட்டர் கலப்புப் பாணி நீச்சலில் தங்கப் பதக்கம் பெற்றவர். இப்போது, யுன்னான் மாநிலத்தின் இரண்டாந்தர தொழில் நுட்பப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகின்றார். சாதாரண நாட்களில், மாணவர்களுடன் சுமுகமாக உறவாடி, பழகுவதாகவும், மாணவர்கள் தம்மை "அக்காள்" என கூப்பிடுவதாகவும் அவர் செய்தியாளரிமும் தெரிவித்தார்.
1 2 3
|