
பாங் வாங் இங்
ஊனமுற்றோர் என்ற முறையில், அன்றாட வாழ்க்கையில், அடிமட்டத்தில் வாழும் மக்கள் மீது குறிப்பாக, ஊனற்றோர்களின் வாழ்க்கை மீது அவர் மிகுதியும் அக்கறை காட்டுகின்றார்.
"தற்போது, ஊனமுற்றோர்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் முறையில் குறைபாடுகள் உள்ளன. வசதியான வாழ்க்கை நடத்தும் நாள், ஊனமுற்ற சகோதரர்கள்-சகோதரிகளை கவனிக்க மறந்து விடக்கூடாது" என்றார்.

ஈ இன மக்கள்
கடந்த ஆண்டு நடைபெற்ற, பத்தாவது தேசிய மக்கள் பேரவையின் மூன்றாவது கூட்டத்தொடரில், ஊனமுற்றோர்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டத்தை திருத்த வேண்டும் என்று அவர் முன்மொழிந்தார். அவரது இந்த யோசனை, அரசின் பெரும் கவனத்தை ஈர்த்தது. பயனுள்ள முறையில் இப்பிரச்சினை தீர்க்கப்பட்டது. இப்போது யுன்னான் மாநிலத்தில் புதிதாகக் கட்டப்பட்ட குடியிருப்பு பிரதேசத்தில், ஊனமுற்றோருக்காக தனிப்பாதை போடப்பட்டது. இது அவர்களின் நடமாட்டத்திற்கு வசதியாகின்றது. இது மட்டுமின்றி, அரசின் நிதியுதவியுடன் சில பொது இடங்களில் தடங்கல் இல்லாத வழிகளும் பெரிதும் மேம்பட்டுள்ளன. தமது முன்மொழிவு இவ்வளவு சீராக செயல்படுத்தப்பட்டதைக் கண்டு, அவர் மிகவும் மகிழ்ந்தார். மக்களின் சார்பில் யோசனை கூறி, அரசின் பணி மீது கண்ணானிப்பு மேற்கொள்ளும் தமது மனவுறுதியை மேலும் திடமாக்கினார்.
இவ்வாண்டு, இரண்டாந்தர தொழில் நுட்பப் பள்ளி கல்வி சீர்திருத்தம் பற்றிய யோசனையுடன் அவர் பெய்சிங் வந்தார்.
"எங்கள் மாநிலத்தில் தொழில் நுட்ப கல்வி அமைப்பு இன்னமும் முழுமையாக இல்லை. இரண்டாந்தர தொழில் நுட்பப் பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பில் பல இன்னல்களை எதிர்நோக்குகின்றனர்" என்றார்.
அனைவரும் இணைந்து பாடுபடுவதன் மூலம், அரசின் உதவியுடனும் இந்த இன்னல்கள் தீர்க்கப்பட்டு விடும் என நம்புவதாக அவர் சொன்னார்.
1 2 3
|