
புலான் இன பெண்
சீனாவில் 22 சிறுபான்மை தேசிய இனங்களுக்கு ஒரு லட்சம் மக்கள் தொகை உள்ளது. யுன்னான் மாநிலத்தில் மட்டும் இருக்கின்ற புலான் இனமும், அவற்றில் ஒன்றாகும். புலான் இன பிரதிநிதி யு சுயே ச்செள அம்மையார் செய்தியாளரிடம் பேசுகையில், புலான் இன மக்கள், பொதுவாக செங்குதான மலைகளிலுள்ள கிராமங்களில் வாழ்கின்றனர். அவர்கள் வெளி உலகுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு குறைவு. அவர்களின் பொருளாதாரமும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இக்கிராமங்களை வறுமையிலிருந்து விடுவிக்க, சீன அரசு, புலான் இன மக்களுக்கு பெரும் ஆதரவு அளித்து வருகின்றது.
உள்ளூர் புலான் கிராம மகளிர் சம்மேளனத்தின் தலைவர் என்ற முறையில் யு சுயே ச்செள, உள்ளூர் மகளிரின் வாழ்க்கையில் மிகுதியும் அக்கறை காட்டுகின்றார். அரசின் வறுமை ஒழிப்பு கொள்கை, கிராமத்தின் வறுமை நிலையை மாற்றியுள்ளது. இருப்பினும், பெண்கள் தமது புலான் கிராமத்திலிருந்து வெளியேறும் சமூக உணர்வு, இன்னமும் பலவீனமாக உள்ளது. முன்னேறிய தொழில் நுட்பத்தை கற்றுக்கொள்ளும் உற்சாகமும் அவ்வளவு பெருகவில்லை. சாதாரண நாட்களில், யு சுயே ச்செள, அடிக்கடி இதர மகளிர் சம்மேளன ஊழியர்களுடன் சேர்ந்து சட்டங்கள் சட்டவிதிகள், தொழில் நுட்ப பயிற்சியின் அடிப்படை பாடங்கள் ஆகியவற்றை மகளிர் கற்றுக்கொள்வதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இவ்வாறு இப்பெண்கள் தத்தமது கல்வியறிவை உயர்த்த வசதி வழங்கப்படுகின்றது.
சீனாவில் நடைமுறைக்கு வரவுள்ள 11வது ஐந்தாண்டுத் திட்டத்தின் மீது யு சுயே ச்செள மிகுதியும் நம்பிக்கை கொண்டுள்ளார். அவர் கூறியதாவது:
"இவ்வாண்டு, சீனாவின் 11வது ஐந்தாண்டு திட்டம் துவங்கும் முதலாவது ஆண்டாகும். இந்த ஐந்தாண்டுகளில் எனது ஊர் வறுமையிலிருந்து விடுபட வேண்டும். அரசு, எங்கள் மலைப்பிரதேசத்து மகளிரின் பார்வையை விசாலமாக்கப் பாடுபட வேண்டும். அவர்களுக்கு மேலும் கூடுதலான பயிற்சி வாய்ப்பினை வழங்க வேண்டும்" என்றார்.
"56 தேசிய இனங்கள், 56 பூக்கள், 56 சகோதர, சகோதரிகள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்..." என்ற பாடல்வரிகள் போலவே, மக்கள் பேரவை என்ற அரங்கில் தலைசிறந்த சிறுபான்மை தேசிய இன பிரதிநிதிகள் சுறுசுறுப்பாகச் செயல்படுகின்றனர். அவர்களில், அருஞ்செயலை ஆற்றியுள்ள இளைஞர்கள், தரையில் காலூன்றி நிற்கும் முறையில் பல்வேறு துறைகளில் தத்தமது விவேகத்தையும் திறனையும் வெளிக்கொணர்கின்றனர்." 1 2 3
|