 ராஜா.....ஆமாம். எடுத்துக்காட்டாக கால் விரல் நோய்வாய்பட்ட சான் அம்மையார் சாந்தி மருத்துவ மனையில் மருத்துவ செலவு குறைவு என்ற தகவலை கேட்டறிந்த பின் தான் சிகிச்சை பெற அங்கே சென்றார். அவர் கூறியதாவது
கலை......நான் சாந்தி மருத்துவ மனையில் சிகிச்சை பெறுவதற்காக ஆயிரம் யுவான் செலவிட்டேன். இது மற்ற மருத்துவ மனையில் ஆகும் செலவை விட ஈராயிரம் யுவான் குறைவாகும் என்றார் அவர்.
ராஜா......பெய்சிங் நகரில் மருத்துவச் சீர்திருத்தம் மேற்கொள்ளபடுகின்றது. தவிரவும், சீனாவின் ஹோநான், ஜெச்சியாங், சாந்துங் முதலிய இடங்களில் உள்ள மருத்துவ மனைகளிலும் செலவை குறைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றில் ஒருவகை நோய்க்கான கட்டண வரம்புக் கட்டுப்பாடு சோதனை முறையில் நடைமுறைபடுத்தப்படுகின்றது.
கலை.....ராஜா நீங்கள் சீனாவில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களை உற்று கவனித்துள்ளீர்கள். இது பற்றி எனக்கு விபரமாக விவரியுங்கள்.
1 2 3
|